சில பழங்களின் பயன்கள பத்தி சொல்றேன், மறந்திட்டிங்கனா அப்பப்ப வந்து பார்த்து தெரிஞ்சுக்கங்க.
பாதாம் பருப்பு
இதை வாதுமைப் பருப்பு என்றும் சொல்லலாம், கண் பார்வையைத் தெளிவு படுத்தும், உடலில் இரணமிருந்தால் ஆற்றும், ஆண் பெண் இன்பத்தை அதிகரிக்கச் செய்யும், புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும், தாதுவை பெருக்கும்.
மாதுளம் பழம்
இதைச் சாப்பிட்டால் அறிவு விருத்தியாகும். ஞாபக சக்தியை உண்டு பண்ணும். பித்தம் சம்பந்தமான கோளாறுகளைப் போக்கும். உடல் சூட்டைத் தணித்து சமப்படுத்தும், சீதபேதியை நிறுத்தும், மலச்சிக்கலைப் போக்கும், இருமலைக் குணப்படுத்தும்.
வெள்ளரிப்பழம்
நல்லஜீரண சக்தியை உண்டு பண்ணும், உடலுக்கு நல்ல பலத்தைத் தரும், உடலின் புண், சொறி, சிரங்கு இவைகள் இருந்தால் அவைகளை ஆற்றும். ஆனால், சீதளத்தைக் கொடுக்கும்
அண்ணா சூப்பர் , குட்டீஸ் கார்னர்ல ரெக்கமெண்ட் பண்றோம்.
ReplyDeleteநன்றி குட்டீஸ்
ReplyDeleteநன்றி நண்பரே.
ReplyDeleteநல்ல உபயோகமான தகவல்கள்.
தொடருங்கள் உங்கள் நல்ல பணியை. . . .