வாழைப்பழம்
Posted by
இக்பால்
at
2
comments
Labels: பழங்கள்
ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு பழங்கள்
ஆரஞ்சு
வைட்டமின் ‘சி’ அதிக அளவில் உள்ளது. மற்ற பழங்களைவிட கால்சியம் அதிக அளவில் இருக்கிறது. பசி உருவாக்குவதில், நுரையீரல் ஆஸ்துமா பிரச்னைகளில், இருதய நோய்களில், எலும்புகளில், பற்களுக்கு மற்றும் உடல் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குவதில் இந்தப் பழத்தின் பங்கு அதிகம்.
கலோரி அளவு: ஒரு 100 கிராமுக்கு 48 கி.கலோரி.
ஒரு 100 கிராமில்:
நீர் 87.8%
மாவுச்சத்து 10.6%
தாதுக்கள் 0.3%
கால்சியம் 0.05%
இரும்பு 0.1மி.கி.
பொட்டாசியம் 19.7கி.மி.
தாமிரம் 0.07மி.கி.
குளோரின் 3.2.மி.கி.
வைட்டமின் ‘பி’ 120IU
புரோட்டின் 0.9%
கொழுப்பு 0.3%
நார்ச்சத்து 0.3%
பாஸ்பரஸ் 0.02%
சோடியம் 2.1மி.கி.
மக்னீஷியம் 12.9மி.கி.
கந்தகம் 9.3.மி.கி.
வைட்டமின் ‘ஏ’ 350IU
வைட்டமின் ‘சி’ 68IU
ஆப்பிள்
நார்ச்சத்து அதிகம். கூடவே கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் இருக்கிறது. தோலில் வைட்டமின் ‘சி’ இருப்பதால் ஆப்பிளை எப்போதும் தோலோடு சேர்த்து சாப்பிடுவதே நல்லது. உடல் நலம், சுறுசுறுப்பு இரண்டையும் கூட்டும். இரத்த சோகையைப் போக்கும். இரத்தத்திலுள்ள நீர்த்தன்மையைக் காக்கும் சக்தி ஆப்பிளுக்கு உண்டு.ஆப்பிளில் இருக்கிற ‘மேலிக் அமிலம்’ கல்லீரல், கணையம் இரண்டையும் பாதுகாக்கும் சக்தி கொண்டது. தவிர, ஆப்பிளில் இருக்கிற ‘பெக்டின்’ உடலின் நச்சுப்பொருட்களை அழிக்கும்.
கலோரி: 100gm ஆப்பிளில் 59 கிலோ கலோரி சக்தி இருக்கிறது.
100 கிராமில் :
நீர் 85.9%
மாவுச்சத்து 9.5%
தாதுக்கள் 0.4%
பாஸ்பரஸ் 0.02%
வைட்டமின் ‘பி’ 40IU
புரோட்டின் 0.3%
கொழுப்பு 0.1%
சுண்ணாம்புச் சத்து 0.01%
இரும்புச்சத்து 0.3%
Posted by
இக்பால்
at
0
comments
Labels: பழங்கள்
சில பழங்களின் பயன்கள பத்தி சொல்றேன், மறந்திட்டிங்கனா அப்பப்ப வந்து பார்த்து தெரிஞ்சுக்கங்க.
பாதாம் பருப்பு
இதை வாதுமைப் பருப்பு என்றும் சொல்லலாம், கண் பார்வையைத் தெளிவு படுத்தும், உடலில் இரணமிருந்தால் ஆற்றும், ஆண் பெண் இன்பத்தை அதிகரிக்கச் செய்யும், புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும், தாதுவை பெருக்கும்.
மாதுளம் பழம்
இதைச் சாப்பிட்டால் அறிவு விருத்தியாகும். ஞாபக சக்தியை உண்டு பண்ணும். பித்தம் சம்பந்தமான கோளாறுகளைப் போக்கும். உடல் சூட்டைத் தணித்து சமப்படுத்தும், சீதபேதியை நிறுத்தும், மலச்சிக்கலைப் போக்கும், இருமலைக் குணப்படுத்தும்.
வெள்ளரிப்பழம்
நல்லஜீரண சக்தியை உண்டு பண்ணும், உடலுக்கு நல்ல பலத்தைத் தரும், உடலின் புண், சொறி, சிரங்கு இவைகள் இருந்தால் அவைகளை ஆற்றும். ஆனால், சீதளத்தைக் கொடுக்கும்
Posted by
இக்பால்
at
3
comments
Labels: பழங்கள்

