நம் வீட்டில் அடிக்கடி உபயோகப் படுத்தப்படும் பொருட்களின் பயன்கள்
இஞ்சி
வியாதிக் கிருமிங்க உடம்பை அண்ட விடாம கோட்டை மாதிரி காக்கறதுல இஞ்சிக்கு மிஞ்சி எதுவுமில்ல! விரல் நீளத்துக்கு ஒரு துண்டு இஞ்சியை எடுத்து தோல் நீக்கிட்டு நசுக்கி, சாறு எடுத்துக்கோங்க. சட்டில ஒரு ஸ்ப10ன் சர்க்கரையை போட்டு வறுத்து சர்க்கரை சிவந்ததும் இஞ்சிச் சாறை விடணும். சர்க்கரை முதல்ல கெட்டியாகி அப்புறம் கரைஞ்சதும் அடுப்புலருந்து இறக்கி, அரை டம்ளர் பால் சேர்த்து குடிக்கணும்.
எலுமிச்சைப் பழம்
வாந்தியை நிறுத்தும், களைப்பைப் போக்கும், பித்த சம்பந்தமான கோளாறுகளைப் போக்கும், தாகத்தை தணிக்கும். வாய்வுக் கோளாறுகளைப் போக்கும். அளவு மீறிய வயிற்றுப் போக்கை நிறுத்தும், இருமலைக் குணப்படுத்தும். மலச்சிக்கலைப் போக்கும், வயிற்று வலியைப் போக்கும்.
பெருங்காயம்
மலக் கிருமிகளை வெளியேற்றி விடும். கபத்தை உடைத்து வெளியேற்றும். வாத சம்பந்தமான வியாதிகளைத் தணிக்கும். விஷப் பூச்சிகளின் விஷத்தை முறித்துவிடும். மூலரோகத்தை படிப்படியாகக் குணப்படுத்தும். வாயுவை நீக்கும்.
வெந்தயம்
பதார்த்தங்களை தாளிக்கும் பொழுது வெந்தயத்தை எண்ணெயில் போட்டு சிவக்க வைத்துத் தாளிப்பார்கள். இது பதார்த்தத்திற்கு நல்ல மணத்தைத் தரும். உடல் உஷ்ணத்தைத் தணித்து சமநிலையில் வைக்கும். ரத்த பிரமேகம் என்ற நோயைக் குணப்படுத்தும். காச நோயைக் குணப்படுத்தும். சீத பேதியைக்கூட நிறுத்தும்ää தாதுவை விருத்தி செய்யும்.
Posted by
இக்பால்
at
3
comments
Labels: பாட்டி வைத்தியம்
உடலில் எந்த கோளாறையும், வலிகளையும் போக்கும் வல்லமை படைத்தது மூன்று இயற்கை மூலிகை பொருட்களைப் பற்றி ஒரு சிறு குறிப்பு.
இஞ்சி : மூட்டு வலி உட்பட எந்த வலியையும் போக்கும். கொதிக்கும் தண்ணீரில், இரண்டு துண்டு இஞ்சியை நறுக்கிப் போட்டு, அந்த தண்ணீரை குடித்து வாருங்கள்; அப்புறம் தெரியும் இஞ்சியின் மகிமை. மோர், ஜூஸ் என்று, எந்த பானம் குடித்தாலும், அதில் ஒரு ஸ்பூன் இஞ்சி சாறை கலந்து குடியுங்கள். 40 வயதுக்கு பின் மூட்டை பிடித்துக்கொண்டு அவஸ்தைப்பட வேண்டாம்.
கற்றாழை: சூட்டுக்கட்டி, தீக்காயம் என்றால், உடனே டாக்டரை பார்க்க ஒடுகிறோம். அவர், "ஆயின்ட் மென்ட்' தருவார்; "ஆன்டி பயாடிக்' மாத்திரை தருவார். ஆனால், பல ஆண்டுக்கு முன் இதெல்லாம் இருந்ததா? அப்போ தெல்லாம் கற்றாழை சாறு தான். அதைக் காயத்தில் போட்டால், அடுத்த நாளே வடு காணாமல் போய்விடும்.
"இப்போது பலருக்கும் இதை, "ஆலுவேரா' என்று தெரியுமே தவிர, கற்றாழை தான் அது என்று புரியாது; முகம் பளபளப்பது முதல் சரும அழகுக்கும், "ஆலு வேரா' ஆயின்ட்மென்ட், ஜெல் என்று ஏதேதோ வந்து விட்டது. கடைகளில் அழகான பாட் டில்களில் அடைத்து தரு வதை பயன்படுத்துவதை விட, நீங்களே, கற்றாழையை வளர்க்கலாம்; தேவைப்படும்போது பயன்படுத்தலாம்!'
மஞ்சள்: உடலில் எந்த வீக்கமாகட்டும், வயிற்று கோளாறாகட்டும் அவற்றை நீக்கும் இயற்கை தன்மை கொண்டது மஞ்சள். சாப்பாட்டில், சிற்றுண்டியில், அன்றாடம் 900 முதல் 1800 மில்லி கிராம் வரை மஞ்சளை பயன்படுத்த வேண்டும்.
Posted by
இக்பால்
at
2
comments
Labels: பாட்டி வைத்தியம்
