Get paid To Promote at any Location

முளைக்கீரை


இக்கீரை ஒன்றே எல்லா வகையான தாதுக்களையும் உள்ளடக்கியது. இக்கீரையில் அடங்கியுள்ள இரும்பு மற்றும் தாமிரச் சத்துக்கள் இரத்தத்தை சுத்தம் செய்து, உடலுக்கு அழகும் மெருகும் ஊட்டவல்லது.

மேலும் இதில் அடங்கியுள்ள மணிச்சத்து மூளைவளர்ச்சி மற்றும் எலும்பினுள்ளே அமைந்துள்ள ஊண் அல்லது மேதஸ் என்னும் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது. நூறு கிராம் முளைக் கீரையில் 9000/ (அகில உலக அள்வு)வைட்டமின் A உள்ளது.

இக்கீரையை கடைந்து உண்டால் உட்சூடு,இரத்த கொதிப்பு, பித்த எரிச்சல் முதலிய நோய்கள் குண்மாகும்.அத்துடன் கண் குளிர்ச்சியை பெறும். சொறி, சிரங்கு முதலிய நோய்கள் இக்கீரையை உண்பதனால் குணமாகும். குழந்தை முதல் முதியோர் வரை யாவரும் உண்ணலாம்.

இக்கீரையில் உள்ள சத்துக்கள் - 100கிராம் அளவு
1.சுண்ணாம்பு சத்து - 397 மில்லி கிராம்
2.மெக்னிசியம் - 247 மில்லி கிராம்
3.ஆக்ஸாலிக் அமிலம் - 772 மில்லி கிராம்
4.மணிச்சத்து - 83 மில்லி கிராம்
5.இரும்பு சத்து - 25.5 மில்லி கிராம்
6.சோடியம் - 230 மில்லி கிராம்
7.பொட்டாசியம் - 341 மில்லி கிராம்
8.தாமிரசத்து - 0.33 மில்லி கிராம்
9.கந்தக சத்து - 61 மில்லி கிராம்
10.குளோரின் சத்து - 88 மில்லி கிராம்

ஆகிய சத்துக்கள் அடங்கிய இக்கீரையை பயன்படுத்தி நளமுடன் வாழுங்கள்.

1 comments:

said...

அருமையான பதிவு , தொடரட்டும் உங்களின் பணி, சரியான புகைப்படத்தை நடுவில் சேர்த்தால் சூப்பரா இருக்கும்