Get paid To Promote at any Location

புதன், ஜனவரி 30, 2008

சிறுகீரை


சிறுகீரை ஒரு சத்து மிகுந்த கீரையாகும். இது மருத்துவ மகத்துவம் வாய்ந்தது. இந்தக் கீரையையினால் உடலுக்கு அழகும் வனப்பும் கிடைக்கும்.இது காச நோய்,படலம்,பாதரச வேகம், வெரணம், மூத்திரக் கிரிச்சர வீக்கம், பித்த் நோய், தாவரங்களினால் ஏற்படும் நஞ்சு முதலியவைகள் நீங்கும்.
மேலும் இக்கீரை வாத நோயை நீக்க கூடியது என்பார்கள்.அத்துடன் கல்லீரலுக்கும் நன்மையைச் செய்யும். விஷக்கடி முறிவாக பயன்படக்கூடிய இக்கீரை , சிறுநீரகம் தொடர்பான குறைபாடுகளையும் அகற்றவல்லது,
பயிரிடப்படும் முறை
இக்கீரை இந்தியாவெங்கிலும் தோட்டப்பயிராகவும், காட்டுப்பயிராகவும் பயிரிடப்படுகிறது. வீட்டுத்தோட்டங்களிலும் பயிரிடலாம். இக்கீரையை பயிரிடுவதற்கு முன் இதற்குரிய பாத்தியை முன்பே ஏற்பாடு செய்து கொள்ளவேண்டும். கோடக்கால இறுதியில் விதைகளை அதிக நெருக்கமில்லாமல் விதைப்பது நல்லது. விதைத்த பாத்திகளில் பூவாளியினால் தண்ணீரை காலை வேளைகளில் தெளிப்பது நல்லது. இகீரைக்கு தண்ணீர் அதிகம் தேவையில்லை. ஆனால் பாத்தி எப்போதும் ஈரமாக இருக்க வேண்டும்.நிழல் கூடாது, வெளிச்சம் மிகுதியும் தேவை. 25 நாட்களில் கீரை தயாராகிவிடும். 40 அல்லது 50 நாட்களில் இக்கீரையை செடியோடு பிடுங்கி உபயோகப்படுத்தலாம்.
இச்சிறுகீரையில் உள்ள சத்துக்கள்:
சக்தி - 33 கலோரி, நீர்சத்து - 90கிராம், புரதம் - 2.8கிராம், கொழுப்பு - 0.3கிராம், தாதுக்கள் - 2.1கிராம், கார்போஹைட்ரேட் - 4.8கிராம், கால்சியம் - 251 மில்லி கிராம், பாஸ்பரஸ் - 55 மில்லி கிராம், இரும்பு - 27.3 மில்லி கிராம் ஆகிய சத்துக்கள் உள்ளன.

இக்கீரையுடன் சீரகம், மிள்கு, சோம்பு, வெங்காயம், இஞ்சி, தக்காளி, உப்பு ஆகியவற்றை சேர்த்து வேகவைத்து சூப் வைத்தும் சாப்பிடலாம், கீரையை கடைந்து சாதத்துடனும் சாப்பிடலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இக்கீரையை தினமும் சாப்பிட்டால் இன்சுலின் இயல்பாக சுரக்கும் என்பார்கள்.
நல்ல சுவையும் நாவிற்கு ருசியும் உடலுக்கு வலுவும் கொடுக்கும் இக்கீரையை வீட்டுத்தோட்டங்களில் வளர்த்து உணவுடன் சேர்த்து பயனடையுங்கள்.