Get paid To Promote at any Location

கோவைக்காய் சமைக்கும் முறை



கோவக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடிகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

ரகம்- 2 சர்க்கரை நோயாளிகள் தினமும் கோவக்காயை சமைத்து சாப்பிட்டால் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம். அனைத்துக் கடைகளிலும் மிக எளிதாகக் குறைந்த விலையில் கிடைக்கும் கோவக்காய் நார்ச்சத்து நிரம்பியது. அதை சமைத்தும் பச்சையாகவும் சாப்பிடலாம். இதைப்பற்றி நமது பல வலைபதிவ நண்பர்கள் கும்மிருந்தார்கள்.இதை மருந்து மாதிரி சாப்பிடாமல் எப்படி சுவையாக சாப்பிடலாம் என்பதற்கான எனது முயற்சி


அதை எவ்வாறு சமைப்பது என்பதை காண்போம்

தேவையானப் பொருட்கள்

கோவங்காய்-1/4கிலோ
வெங்காயம்- ஒன்று
தக்காளி - 2
எண்ணெய் - ஒரு மேசக்கரண்டி
குழம்பு தூள-இரண்டு தேக்கரண்டி
மஞ்சத்தூள் -அரைதேக்கரண்டி
கடுகு சீரகம்-ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை-ஆறு எண்ணிக்கை
உளுத்தம் பருப்பு-ஒரு தேக்கரண்டி
தேங்காப் பூ--மேசைக்கரண்டி
உப்புத்தூள்-ஒரு தேக்கரண்டி
பாசிப்பருப்பு-7மேசைக்கரண்ட

கோவைக்காய் ,தக்காளி வெங்காயம், ஆகியவற்றை வட்டம்வட்டமாக நறுக்கி கொள்ளவும்
சட்டியில் எண்ணெயை காயவைத்து கடுகுசீரகம் உ.பருப்பு,சோம்பு கறிவேப்பிலை போட்டு பொரிந்தவுடன் வெங்காயத்தை போட்டு வறுக்கவும்.

தக்காளி போட்டு நன்கு சுருள வதங்கியதும பிறகு நறுக்கி வைத்துள்ள காய்களை போட்டு அதை தொடர்ந்து உப்பு,குழம்பு தூள்,மஞ்சத்தூளப் போட்டு நன்கு கிளறவும் அதில் ஊறவைத்த பாசிப்பருப்பை போட்டு , தேங்காப்பூவை போட்டு கிளறி, 1 1/2கப் தண்ணிர் ஊற்றி 1 விசில் போட்டு இறக்கிவிடவும்

இது சப்பாத்தி சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்

4 comments:

Anonymous said...

it;s look like kerala style?? huh!!

said...

ஆம். என் கேரள நண்பர் செய்த முறை. சாப்பிட்டபோது நன்றாக இருந்தது, அதனால்தான் நம் பதிவு நண்பர்களோடு பகிர்ந்து கொண்டேன்.

Anonymous said...

இங்கு கோவைக்காய் கிடைக்குமா என்பது தான் கேள்விக்குறிய விசயம். தேடி பார்த்து சமைக்கிறேன். செய்முறைக்கு நன்றிகள் :)

said...

en vetil entha kai olathu,,ungal kuripu ku nafri,,kovakai orukai seithan nandraga erunthuthu,,erunthalum undal kuripu vendum,brinjal vathal,pickle um solunggal