Get paid To Promote at any Location

சக்தியளிக்கும் மாதுளை


மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இதில் இனிப்பு, புளிப்பு இரண்டு ரக மாதுளையும் சக்தியளிக்கும் பழத்தில் சிறந்தது. மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன. மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது.

பழம்- சந்நியாசி ரோகம், வாந்தி, கபம், மிகுதாகம், மலட்டு நோய், வாய் நீர் சுரப்பு, விக்கல், மாந்தம், அதிசுரம், நெஞ்செரிவு, காதடைப்பு, நீங்காமயக்கம், உடற்சூடு இவை போகும்.
பிஞ்சி - பலவித மலக்கழிச்சல் போகும்.
தோல் - டயேரியா போகும்
சாறு - புத்துணர்ச்சி தரும்.
விதை - விந்து இறுகும். உடல் குளிர்ச்சியாகும்.

மாதுளம் பழத்தில் பாஸ்பரஸ் 70மி.கி. உள்ளது. கால்சியம்,இரும்பு ஆகிய தாது பொருட்கள், வைட்டமின்கள் பி,சி ஆகியவை சிறிதள்வு உள்ளன. கால்சியம் உடலில் சேருவதற்கு பாஸ்பரஸ் உதவி புரிகிறது.

இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது. புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. ரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. பெப்டிக் அல்சர், டியோடினல் அல்சர், கேஸ்ட்ரிக் அல்சர் முதலிய எந்த வகையான அல்சரையும் குணமாக்குகிறது.
மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் நீர்த்துப் போன சுக்கிலம் கெட்டிப்படுகிறது. மேக நோயின் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மாதுளை விதைகளைச் சாப்பிட்டால் பிரமேகம் பாதிப்பிலிருந்து நிவர்த்தியாகும். பிரமேக வியாதியால் ஏற்படும் இதய நோய்கள், இதய பலகீனம், நிவர்த்தியாகும். இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கிறது. தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பகங்கள் நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண்தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.
மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். அடிக்கடி மயக்கம் உள்ளவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் நன்மை கிடைக்கும். மாதுளம்பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும்.
மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய ரத்தம் உற்பத்தியாகி விடும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும். மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும். மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.
மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப்படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்.
மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கட்டிக் கொண்டால் தலைவலி தீரும். வெப்பநோய் தீரும். மாதுளம் விதை, வேர்ப்பட்டை, மரப்பட்டை இவற்றைச் சமமாக எடுத்து உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு, வேளைக்கு 5 கிராம் வீதம் சுடுதண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் பெண்களின் கர்ப்பாசய நோய்கள் அனைத்தும் நிவர்த்தியாகி பெண்களின் ஆரோக்கியம் நீடிக்குமாம். மாதுளை ஒரு பல்முனை நிவாரணியாகப் பயன்படுகிறது.

குறிப்பு : இப்பகுதியில் இடம் பெறும் கட்டுரைகள் எமது அனுபவத்தை, படிப்பறிவை அடிப்படையாகக் கொண்டு எழுதியவை.

10 comments:

said...

நல்ல தகவல்.
நன்றி

said...

வரவுக்கு நன்றி குமார்.

Anonymous said...

So many wonderful info. Thank you for posting. We all really could use this info.Excellent post.

Ramya

said...

நன்றி ரம்யா.

said...

நன்றி. நல்ல விசயம்

said...

நன்றி. நல்ல விசயம்

said...

நல்ல பதிவு.

said...

நண்பரே உங்கள் பதிவை இதில் இட எனக்கு அனுமதி அளித்ததுக்கு மிக்க நன்றி நண்பரே. என தளத்தில் http://azhkadalkalangiyam.blogspot.com/

இட்டு உள்ளேன். மிக்க நன்றி.

Anonymous said...

It's very useful information. please give more fruits information for male and female fertility.please we are trying to conceive more than 4 years. Thank u

said...

மாதுளம் விதையை எவ்வாறு உண்பது