நீரின்றி அமையாது உடலும், உடல் உறுப்புகளும்.
ஒரு காலத்தில் அதிகமாக செலவு செய்தால் பணத்தை தண்ணீர்மாதிரி செலவு செய்கிறான் என்பார்கள். அதற்கு மாற்றாக தண்ணீரை பணம்மாதிரி வீணாக்காதே என்று சொல்லும் காலம் வெகுதொலைவில் இல்லை. தமிழ்நாட்டில் மட்டுமல்ல பல நாடுகளிலும் தண்ணீர் பற்றாக்குறை ஆரம்பித்தாகிவிட்டது. இன்னுமொறு உலக யுத்தம் இத்தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்று வல்லுஞர்கள் கூறுகிறார்கள். இப்படிப்பட்ட தண்ணீரின் பயன்களை பார்ப்போம்.
தண்ணீரின் முதன்மையான வேலையே வெப்பத்தை / வெப்பத் தாக்குதலை தன்னுடன் கொண்ட தாதுப்பொருட்களைக் கொண்டு தவறாமல் காப்பதுதான். கோடையில் தொடர்ந்து கடினமான வேலை செய்யும் கட்டுமானத் தொழிலாளர்கள், இயந்திரங்களை இயக்குபவர்கள், நீண்ட தூரம் வாகனங்கள் ஓட்டும் டிரைவர்கள், 'ஷிப்ட்' முறையில் பணிபுரிபவர்கள் போன்றவர்களுக்கு, உடம்பில் தண்ணீரின் அளவு வெகுவாகக் குறைந்து சோர்ந்துவிடுவார்கள். அவர்கள் தண்ணீரைக் குடித்தால் உடன் புத்துணர்ச்சி பெற்று, வேலைகளைச் செய்ய முடியும். தினசரி கோடையில் குறைந்தது 3_4 லிட்டர் வரை குடிக்க வேண்டும். ஒரே நேரத்தில் நிறையக் குடிப்பதற்குப் பதிலாக, சிறிது சிறிதாகத் தொடர்ந்து குடித்துக் கொண்டே வரலாம். ஒரே நேரத்தில் அரை லிட்டர் வரை அதிகபட்சமாக குடிக்கலாம். சாப்பிட்ட பிறகு, ஒரேயடியாக நிறையத் தண்ணீரைக் குடிப்பது செரிமான சிக்கலை உண்டு பண்ணும். வயிறு நிறைய தண்ணீரைக் குடிப்பதும், உடனே படுப்பதும் தவறுதான். இவையெல்லாம் தண்ணீரில் நாம் செய்யும் தலையாயத் தவறுகள்.
தண்ணீரின் பயன்கள்
சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்கும், மேலும் கோடையில் இரவில் தண்ணீரைக் குடித்தால், நார்ச்சத்துடன் சேர்ந்து காலையில் மலச்சிக்கலையும் மாலையில் மனச்சிக்கலையும் தீர்க்கும். பெரிய 'கலந்தாய்வு கூட்டம்' நடக்கும் போது முதலில் தண்ணீரை வைத்திருப்பதற்கான காரணம், அது மனப்பதற்றத்தைக் குறைக்கும் என்பதனால். நம் உடம்பின் செல்களும், திசுக்களும், சிறுநீரகமும் தண்ணீரால் புத்துணர்வு பெறுகின்றன.
தண்ணீரில் இருப்பவை : ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், கால்சியம், மினரல்கள், உப்புகள்
இப்படிபட்ட தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி பயன்சேர்ப்போம்
ஞாயிறு, ஜனவரி 6, 2008
தண்ணீர், ஓர் உயிர் நீர்.
Posted by
இக்பால்
at
மாலை 5:07
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
எல்லாம் சரிதான். ம்ம்ம்... follow பண்ணமுடியலயே!!
என் வலைப்பக்கம் வந்தமைக்கு ரொம்ப நன்றி ராஜமோகன்.
Post a Comment