என்ன செய்யறது இப்படி தலைப்பு வைச்சாதான், வந்து பதிவ படிக்கிறாங்க. தக்காளி பானத்த குடித்து உடலை பளபளன்னு ஆக்கிடுங்க.
தக்காளியின் பிறப்பிடம் தென் அமெரிக்கா. இது சர் வால்டர் ராலே என்பவரால் முதன்முதலில் ஐரோப்பாவில் அறிமுகபடுத்தப் பட்டது.
இதில் தண்ணீர் - 94.37%, புரொட்டீன் - 0.9%, கொலஸ்ட்ரால்- 0.4%, கார்போ ஹைட்ரேட்௩.9%, மினரல்ஸ்-0.9%, விட்டமின் 'A'- 100IU / 100 கி, விட்டமின் - C, B1,B2, கால்சியம், பாஸ்பரஸ், மாக்னீசியும் மற்றும் பல உள்ளன.
சிட்ரிக் மற்றும் பாஸ்பரிக் அமிலங்கள் இரத்தத்தை சுத்திகரிக்க அதிகம் உதவுகிறது. தினமும் நான்கு தக்காளி உண்டால் போதும் ஒரு நாளைக்கு தேவையான வைட்டமின் 'சி' கிடைத்து விடும். தக்காளி பழுக்க,பழுக்க வைட்டமின் 'சி' அதிகரித்துக் கொண்டே இருக்கும். சிறு குழந்தைகளுக்கு தக்காளி சாறு நிறைய கொடுக்கலாம். ஏனெனில் இது ஆரஞ்சு பழச்சாறை விட நல்லது. பொதுவாக பரவலாக இதை சாலட்டாக பயன்படுத்துகிறார்கள். தென்னிந்திய பகுதியில் சமையிலிலும், வட இந்தியாவில் இதை சூப்பாக அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
பயன்கள்
இதில் குறைவான கார்போஹைட்ரேட் இருப்பதால் உடல் எடை குறைப்பிற்கும், நீரிழிவு நோயாளிகளுக்கும் மிக சிறந்ததாகும். மேலும் குடல்களி சுத்தப்படுத்தும், மலச்சிக்கல், ஜீரணம், வாய்வு ஆகியவற்றையும் நீக்கும். கல்லீரல் நோயக்கும், இரத்த சோகைக்கும் மிக சிறந்த பானமாகு.. இதை காய்ச்சலின் போதும் குடிக்கலாம்.
தாவணி போட்ட தக்காளி
Labels: காய்கறியின் பயன்கள்
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
எனக்கு ஜூஸ் வேணாம். நான் அப்படியே சாப்பிடுவேன்
தக்காளிக்கு வந்த நிலமை? [தலைப்பை சொன்னேன்]. நல்ல தகவல்.இன்று தான் உங்க வலைப்பூவை பார்த்தேன். பயனுள்ள பல குறிப்புகள். நன்றி
வரவுக்கு நன்றி, தூயா.
Post a Comment