Get paid To Promote at any Location

முருங்கைகீரை


பச்சைக் கீரைகளில் எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம்தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள். கீரை வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது.அந்த வகையில் முருங்கைக் கீரையின் பயன்களைப் பார்ப்போம்.முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.

சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. அதுபற்றி சற்று விரிவாக காண்போம்.

இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம்.
முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங் களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம்.
முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும்.
முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர் களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும்.
முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்து.
கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து.

முருங்கைக் காயை வேக வைத்து கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். முருங்கைக் காய் சாம்பார் எல்லோருக்கும் பிடித்த மானதே. இந்த சாம்பார் சுவையானதாக மட்டும் இருந்து விடாமல் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கை காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.
முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். தாது விருத்தியை உண்டு பண்ணும். ஆனால் மலபந்தத்தைச் செய்வதில் முருங்கை விதைக்கு முதலிடம் தரலாம்.

முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் பிசின் நல்ல டானிக்குகள் செய்ய பயன்படுகிறது. பச்சைப் பிசினை காதில் ஒரு சொட்டு விட்டால் போதும், காது வலி உடனே நின்று விடும்.

இந்த மரத்தின் வேர் மற்றும் பிசின் சம்பந்தப்பட்ட டானிக்குகளை அல்லது லேகியங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரை சீக்கிரம் வராமல் தள்ளிப்போகும்.

மேலும் இந்தப் பூவுக்கு தாது விருத்தி செய்யும் குணம் உண்டு. முருங்கைப் பூ உஷ்ணத்தை உண்டு பண்ணக் கூடியதுதான் என்றாலும் அதனால் கெடுதல்கள் எதுவும் இல்லை. முருங்கைப் பிசினில் அரை லிட்டர் நீர் விட்டு புதுப் பாண்டத்தில் வைத்திருந்து காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தாது கெட்டிப்படும்.
முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால்,இரத்த சுத்தியும்,எலும்புகளையும் வலுப்படுத்தும். இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம்,அயம்,வைட்டமின் உள்ளது.

கர்ப்பையின் மந்தத் தன்மையை பேக்கி,பிரசவத்தை துரிதப்பட்த்தும்.இதன் இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்தம்,தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும் ஆஸ்துமா,மார்சளி,சயம் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை சுப் நல்லது. முருக்கைப் பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் சூப் செக்ஸ் பலவீனத்தைப் போக்கும்.ஆண்,பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கும்,விந்து விருத்திக்கும் சிறந்தது.

முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும். முருக்கைகாய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன்,இருதய நோய்களை போக்கி இரத்தவிருத்தி தாதுவிரித்திசெய்யும். முருங்கை இலை சாறுடன் தேனும், ஒரு கோப்பை இளநீரும் கலந்து பருக மஞ்சகாமாலை,குடலில்ஏற்படு ம் திருகுவலு,வயிற்றுப்போக்க ு கட்டுபடும். விதையில் இருந்து என்னை தயாரித்து வாயுப்பிடிப்பு,மூட்டுவலி களில் பயன் படுத்தலாம் முருக்கைவேரில் இருந்து சாறெடுத்து பாலுடன் செர்த்துப பருகிவர காசநோய்,கீழ்வாயு,முதுகுவலி குணப்படும்.

வைட்டமின்கள் : முருங்கை இலை 100கிராமில் 92 கலோரி உள்ளது.

ஈரபதம்-75.9%

புரதம்-6.7%

கொழுப்பு-1.7%

தாதுக்கள்-2.3%

இழைப்பண்டம்-0.9%

கார்போஹைட்ரேட்கள்-12.5%

தாதுக்கள்,வைட்டமின்கள்,

கால்சியம்-440 மி,கி

பாஸ்பரஸ்- 70மி.கி

அயம்- 7 மி.கி

வைட்டமின் சி 220 மி.கி

வைட்மின் பி காம்ப்ளக்ஸ் சிறிய அளவில்

15 comments:

said...

பச்சைப் பிசினை காதில் ஒரு சொட்டு விட்டால் போதும், காது வலி உடனே நின்று விடும்.
கொஞ்சம் விவகாரமாகி விடபோகிறது.
முருங்கையில் இவ்வளவு விஷயமா?
இப்பெல்லாம் எனக்கு கீரை ஒத்துக்கொள்ளவில்லை.காரணம் தெரியவில்லை.

said...

ஐயா!
குமார் அவர்களே, இவை எல்லாம் என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். எனக்கு தெரிந்து முருங்கையும், வாழையும் மட்டும்தான் எல்லா பகுதியும் பயன்படுகிறது. வாழையில் பழம்,காய்,தண்டு, பூ, இலை, வாழைப்பட்டை அதேபோல் முருங்கை.
நன்றி

said...

பின்னூட்டம் அல்ல.
இக்பால்- குமார் மட்டும் போதுமே,கூச்சமாக இருக்கு. :-))

said...

Important info. Good.

If you give us points it would be easy to read. Also can save the page and use it when required.

Thanks.

said...

சென்னை போன்ற பெருநகரங்களில் கீரையை கண்டுபிடித்து வாங்குவது என்பதே பெரிய விசயம்தான்.

said...

we can get all green leaves in chennai

said...

நல்ல பதிவு!
இங்கு கிலோ 4 யூரோவுக்கு தாராளமாகக் கிடைக்கிறது.
சும்மா கிடைக்கும் நம் நாடுகளில்
இளம் தலைமுறை இதன் அருமை தெரியாமல் சீண்டுவதில்லை.
வருத்தமே...
சீரியல் பார்க்க சிக்கல் தரும் எதுவுமே
சமைப்பதில்லை. இவை துப்பரவு செய்து சமைக்க சற்று அதிக நேர மெடுப்பதால்...ஒதுக்குகிறார்கள்.

said...

முற்றிலும் உண்மை,
நம்மக்கள் அனேகம்பேர் செய்வதற்கு கடினப்பட்டுகொண்டு சமைப்பதில்லை. முருங்கைகீரை, மணத்தக்காளி,வாழைத்தண்டு, வாழைப்பூ போன்றவையெல்லாம் சுத்தப்படுத்தி செய்வதற்கு சிறிது நேரம் பிடிக்கும். பொதுவாக ஒவ்வொரு காய் மற்றும் கனிகளில் நம் நோய்க்கு உண்டான மருந்து இருக்கிறது. முறையாக பயன்படுத்தினால் நாம் நோய் இன்றி வாழலாம்.

Anonymous said...

நல்ல பதிவு.தொடர்ந்து எழுதுங்கள்.

Anonymous said...

முருங்கைகாய் பாக்யராஜ் சொன்னதிற்கு அப்புறம்தான் பேமஸ் ஆச்சிங்கோ!!!!!

said...

முருங்கையின் மருத்துவ பயன்கள் பற்றி மிகத்தெளிவாக எழுதியுள்ளீர்கள்.
நானும் கீரைகள் பற்றி எனது பதிவில்
எழுத எண்ணியிருந்தேன். என் பணியை சுலபமாக்கி விட்டீர்கள்.தாங்கள் அனுமதிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்
என் பதிவில் தங்கள் பதிவின் சுட்டியை இட்டுல்லேன்.
//இவை துப்பரவு செய்து சமைக்க சற்று அதிக நேர மெடுப்பதால்...ஒதுக்குகிறார்கள்//

உண்மை. நாமும் கொஞ்சம் உதவினால் நிச்சயம் சமைத்துத் தருவார்கள்.

said...

நல்ல பதிவு

Anonymous said...

Excellent info about முருங்கை. முருங்கைகீரை is also an excellent in reducing blood pressure.I try to make முருங்கைகீரை atleast 2 a week. Thanks for all the info.

Ramya

said...

I AM LIVING IN WEST PALM BEACH, FLORIDA USA. I HAVE THREE DRUM STICK TREES. ANYBODY WANTS GREENS COME AND GET IT. SEND ME AN EMAIL BEFORE YOU GET. JEBAMONI4@AOL.COM

said...

தோழரே,ரொம்ப நல்ல குறிப்பு.