Get paid To Promote at any Location

வாயு தொல்லை

நமக்கு உண்டாகும் சில சிறு உடல்நலக் கேடுகளுக்கெல்லாம், வீட்டில் அம்மாவோ, பாட்டியோ அவர்களின் கைப் பக்குவத்தில் கஷாயமோ அல்லது மருந்தாக பயன்படும் உணவோ தயார் செய்து கொடுத்து, பிரச்சனையை தீர்த்து விடுவர். இந்த வீட்டு வைத்தியம் சின்ன சின்னப் பிரச்சனைகளுக்குதான் தீர்வாக இருக்கும். இப்பதிவில் வாயு தொல்லைக்கு என்ன தீர்வு காண்பது என்பதை பற்றி என் பாட்டி சொன்ன குறிப்பு.

வயிற்றில் ஏற்படும் வாயுவைப் பொறுத்தவரை அவ்வப்போது நல்ல பலன் கிடைக்கக்கூடிய வீட்டு வைத்திய முறைகளை செய்து குணமாக்கிக் கொள்ளலாம். ஆனால், நாம் உண்ணும் உணவு, ஜீரணிக்கும் திறன், உடம்பில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்கள் இவற்றைப்பொறுத்து வயிற்றில் வாயுத் தொல்லை இடையிடையே ஏற்படத்தான் செய்யும். அதனால், எப்போதெல்லாம் உங்களுக்கு இந்த பிரச்சனை வந்தாலும் அப்போது இந்த வைத்தியத்தை செய்து அதிலிருந்து மீண்டுக் கொள்ளுங்கள்.

பூண்டு - 50 கிராம்
பெருங்காயம் - 20 கிராம்
கருப்பட்டி - 30 கிராம்

இந்த மூன்று பொருட்களையும் எடுத்துக்கொள்ளுங்கள். முதலில் பூண்டு பற்களை கத்தி முனையால் மெதுவாக குத்தி குத்திவிட்டு, தோலுடன் நெருப்பில் காட்டி வேகும் அளவு சுட்டு தோலை உரித்துக்கொள்ளுங்கள். பெருங்காயத்தையும் நெருப்பில் (தீயாமல்) சுட்டு எடுத்து, கருப்பட்டி சேர்த்து மூன்றையும் மைய அரைத்து ஒரு பாட்டிலில் எடுத்துக்கொள்ளுங்கள். புளியங்கொட்டையைவிட சற்று பெரிய உருண்டையாக அதிலிருந்து எடுத்து, ஒரு நாளைக்கு மூன்று அல்லது ஐந்து வேளை தண்ணீருடன் (மாத்திரைபோல்) வாயில் போட்டு குணமாகும்வரை சாப்பிடுங்கள். பெரும்பாலும் ஒரு நாளிலேயே குணம் தெரியும். !

கருப்பட்டி கிடைக்காதவர்கள் இந்த முறையை பயன்படுத்தி பார்க்கலாம். இதுவும் உடனே பயன் அளிக்க கூடியது.

வாயு தொல்லை ஏற்பட்ட சமயம் பூண்டு பல் 4 (அடுப்பில் காட்டி சுட்டது தோலை நீக்கி விடவும்), 1 தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்து கொதிக்கும் வெந்நீரில் போட்டு சிறிது நேரம் கொதிக்கவிடவும்.பின் அந்த நீரை வடித்து சிறிது சூட்டுடன் இருக்கும் போதே குடித்து வந்தால் கொஞ்ச நேரத்திலேயே வாயு தொல்லை நீங்கி விடும்.