Get paid To Promote at any Location

அகத்திகீரை

தினமும் பகல் உணவில், ஏதாவது ஒரு கீரையை உணவுடன் சேர்த்துக்கொள்வது என்றென்றும் ஆரோக்-கியம் தரும். கொஞ்சம் கசப்பான சுவையுள்ள அகத்திக் கீரை மருத்துவக் குணங்கள் நிரம்பியது. புரதம், இரும்புச் சத்து, சுண்-ணாம்-புச் சத்து, வைட்டமின் ஏ போன்றவை அதிக அளவில் அகத்திக் கீரையில் இருக்கிறது. அகத்திக் கீரையுடன் சின்ன வெங்காயம் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால், குடல் வலிமை பெறும். அரிசி கழுவிய நீரில் அகத்திக் கீரையை வேகவைத்து சூப் செய்து சாப்பிட்டு வந்தால், கல்லீரலும் இதயமும் வலுவாகும். ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் அகத்திக் கீரைக்கு உண்டு. பித்தத்தையும் கபத்தையும் குறைக்கும். வாதத்தை மட்டுப்படுத்தும். உடலின் உஷ்ணத்-தைக் குறைக்கும். கண்கள் குளிர்ச்சி பெறும். மாலைக் கண் நோயைக் குணப்படுத்தும். எந்தக் கீரையாக இருந்தாலும், கீரையை வேக வைத்த நீரை கீழே கொட்டிவிடக் கூடாது. கீரையின் சத்துப் பொருட்கள் அந்த நீரில் இறங்கி-யிருக்கும். அந்த நீரில் சூப் வைத்துச் சாப்பிடலாம். வாயுக் கோளாறு உள்ளவர்கள், அகத்திக் கீரையை அதிகமாகச் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

இக்கீரையில் அடங்கியுள்ள சுண்ணாம்புசத்து பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகின்றது இக்கீரையில் 73 விழுக்காடு நீரும்,, 8.4 விழுக்காடு புரதமும்,1.4 விழுக்காடு கொழுப்பும்,2.1 விழுக்காடு தாதுப்புக்களும், இருக்கின்றன.

சக்தியை கொடுக்கும் ஆற்றல் இக்கீரையில் அதிகம் இருப்பதைக் காணலாம். 100 கிராம் கீரையில் 1,130 மில்லிகிராம் சுண்ணாம்பு சத்தும், 80 மில்லிகிராம் மணிசத்தும், 3.9 மில்லிகிராம் இரும்புசத்தும் அடங்கியுள்ளன. அகத்தியின் இளம்பூவும் மொட்டுக்களும் உணவாக சமைக்க உதவுகின்றன, பொதுவாக இப்பூவை தனியாக சமைத்து உண்பதில்லை. ஆனால் வடநாட்டில் பூவையே தனியாக சமித்து உண்கின்றனர். அகத்திக்கீரையில் இலையும், பூவும், காயும், பட்டையும்,வேரும் மருந்தாக பயன்படுகின்றன.

அகத்திகீரை பொதுவாக சிறுகைப்பு ருசி உடையது. இச்சுவை குடலில் உண்டாகும் நச்சு நீர்களை முறித்து வெளியெற்றும் குணமுடையது. குடலில் தேங்கும் மலம் மற்றும் நிணநீர் ஆகிய அசுத்தங்களை சுத்தம் செய்து, மலச்சிக்கலை நீக்கி மலத்தி உடைத்து வெளியேற்றும் தன்மை உடையது. மேலும் இக்கைப்பு சுவை பித்தச் சூடு, தொணடைப்புண், குடல்புண், அரிப்பு, சொறிசிரங்கு முதலிய தோல் நோய்கள் இக்கீரையை உண்பதால் குணமாகும். தொண்டைப்புண் மற்றும் தொண்டைவலிக்கு அகத்திக்கீரையை பச்சையாக மென்று சாற்றை உள்ளே விழுங்க இந்நோய்கள் குணமாகும். இரத்த பித்தம், இரத்த கொதிப்பு ஆகியவை இக்கீரை உண்பதனால் அகலும். இக்கீரை காய்ச்சலை குறைத்து உடல்சூடை சமன்படுதும் இயல்புடையது. வெய்யிலில் சுற்றி அலிபவர்கள், தேயிலை போன்ற பானங்களைப் பருகி பித்தம் அதிகப்ப்ட்டவர்கள், மலச்சிக்கல் உள்ளோர் அக்த்திக்கீரை வாரம் ஒரு முறை உண்பது நல்லது.

குறிப்பு :பொதுவாக, மாதத்துக்கு இரண்டு நாட்களுக்கு மேல் அகத்திக் கீரையை உட்கொள்ளக் கூடாது! அகத்திக் கீரையை நன்றாக வேகவைத்துத் தான் சாப்பிட வேண்டும். கீரையின் கலர் மாறும் அளவு சமைக்க வேண்டும். "முருங்கக் கீரை வெந்து கெட்டது. அகத்திக் கீரை வேகாமல் கெட்டது" என்பார்கள் ஊர்ப்பக்கம்.
அத்தோடு கீரை உணவை இரவில் கண்டிப்பாக சாப்பிடக் கூடாது. ஏனென்றால் அவை ஜீரணமாக 8 மணி நேரம் ஆகும். இரவில் உண்டால் சரியாக செரிக்காது

0 comments: