பெயருக்கு ஏற்றார்போல புளிப்பு சுவையுள்ள இந்த கீரை, உடல் வலிமையை பெருக்குவதில் முதன்மை வகிக்கிறது. நோஞ்சானாக தெரியும் குழந்தைகளுக்கு அடிக்கடி இந்த கீரையை சிறிதளவெனும் சமைத்து சாப்புட கொடுத்து வந்தால் உடம்பு தேறுவார்கள்.இதன் மகத்துவம் தெரிந்துதான் ஆந்திர மக்கள் இந்த கீரையை "கோங்குத்ரா சட்னியாக" செய்து தினமும் உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள்.
இந்த கீரையில் தாதுபொருட்களும், இரும்பு சத்துக்களும் அதிக அளவில் உள்ளன. இது தவிர வைட்டமின் சத்துக்களும் கணிசமான அளவு கல்ந்துள்ளன. எல்லாவிதமான வாத கோளாறுகளையும் குணப்படுத்தும் வல்லமை இந்த கீரைக்கு உண்டு என்பார்கள். சொறி, சிரங்கு போன்ற சரும நோய் உள்ளவர்கள் இந்த கீரையை சட்னி செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் பெறலாம் என்பார்கள். காசநோயை குணமாக்கும் இந்த கீரை ரத்தத்தை சுத்திகரிப்பதிலும் முதலிடம் வகிக்கிறது. உடல் உஷ்ணத்தை எப்போதும் சீராக வைத்திருக்க உதவுகிறது. அதனால்தான் இந்தகீரையை உடலுக்கும், குடலுக்கும் வளமூட்டும் கீரை என்பார்கள்.
பித்த சம்பந்தமான நோய்களை உடையவர்கள் இந்த கீரையை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. இது பித்ததை அதிகபடுத்தும் குணமுடையது.
இதில் உள்ள சத்துக்கள்:
இரும்பு சத்து - 2.28 மில்லி கிராம்
வைட்டமின் ஏ - 2898 மைக்ரோ கிராம்
மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி அகியவை உள்ளன.
புளிச்ச கீரை
Labels: கீரையின் பயன்கள்
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
Excellent info. I love this புளிச்ச கீரை.I try to eat atleast once a week.
Radha
தங்கள் வருகைக்கு நன்றி!
என்ன ஒரே நாட்டு வைத்தியமா இருக்கு.சரி சரி இயற்கையோடு சேர்ந்து வாழ்ந்தால் நல்லதுதான்.
இதைத்தான் நம் முன்னோர்கள், உணவே மருந்து என்று சொன்னார்கள்
Great Work sir,Please post with photo too..
தங்கள் வருகைக்கும், ஆலோசனைக்கும் நன்றி
Post a Comment