சளித் தொல்லை வந்தால் மூக்கை உறிஞ்சிக் கொண்டு மூலையில் படுத்துவிடவேண்டாம். இதற்கு எனக்கு தெரிந்த முறைகளை சொல்கிறேன். அதை பயன்படுத்தி பயன் அடைந்தால் மகிழ்ச்சியே.
1. மிளகைத் தூளாக்கி, வெல்லம், நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிடசளித்தொல்லை பறந்து போய்விடும்!
2. அதே போல மிளகுப் பொடியை ஒரு காட்டன்துணியில் முடிந்து காலையில் குளித்ததும் உச்சந்தலையில் தேய்க்க சளி, தும்மல்எல்லாம் பறந்தே போய்விடும்!
3. சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்
4. நெஞ்சு சளிதேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
5. கரைக்கவே முடியாத நெஞ்சில் கட்டிக் கொண்டிருக்கும் சளியைக் கரைக்க,கொள்ளு(காணப்பயறு)சூப் அருமையான மருந்து.
6.கற்பூரவல்லி இலைச் சாறு குடித்தால் சளி குணமாகும்.
7. தூதுவளைக் கீரையை சுத்தம் செய்து, துவையல் செய்து சாப்பிட்டால் சளி குணமாகும்.
8. மழைக் காலத்திலும், பனிக்காலத்திலும் பகல் வேளையில் தூதுவளை ரசம் வைத்துச் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்காது.
9. வெங்காயம் சளியை முறிக்கும்.பொரியல் சாப்பிடும் பொழுது சின்ன வெங்காயத்தை சிறியதாக நறுக்கிக் கலந்து சாப்பிட்டால் சளி கரையும்.
10.சிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும். அப்படிப்பட்டவர்கள் நாள்தோறும் தேன் உண்ணுவது மிகுந்த பயனுள்ளது. அதில் வைட்டமின் 'c' இருக்கிறது.வைட்டமின் 'c' ஜலதோஷம் பிடிக்காமல் தடுக்க உதவியாய் இருக்கிறது.
11. துளசி இலையை சாப்பிட்டால் சளி குணமாகும்.
12. சிறு வெங்காயச் சாறு (20 மிலி), தேன் (20 மிலி), இஞ்சிச்சாறு (20 மிலி) இம்மூன்றையும் ஒன்றாக கலந்து ஒருவேளை வீதம் தொடர்ந்து இரு தினங்கள் உணவுக்கு முன் பருகி வர சிறந்த பலனைத் தரும்.
13. ஓமம் பொடி (10 கி.), மஞ்சள்பொடி (20 கி.), பனங்கற்கண்டு (40 கி.), மிளகு பொடி (10 கி.). சூடான பசும்பாலில் மேற்கூறிய நான்கையும் ஒன்றாக கலந்து அதில் 5-8 கிராம் வரை இருவேளை காலை, மாலை பருகி வர உடன் குணம் கிடைக்கும்
14. தும்பைச் செடியின் இலைச்சாறு (10 மிலி), சிறு வெங்காயச் சாறு (10 மிலி), தேன் (5 மிலி). இவை மூன்றையும் ஒன்றாகக் கலந்து தினமும் மூன்று வேளை வீதம் உணவுக்கு முன் தொடர்ந்து பருகிவர சிறந்த குணம் கிடைக்கும்.
15. சளி, தடுமன்( ஜலதோசம்) அதிகமாக இருந்தால், மிளகு ஒரு ஸ்பூன் எடுத்து நெய்யில் வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் மூன்று வேளை அரை ஸ்பூன் பொடியினை சாப்பிடுவது நல்லது இரண்டு நாட்களிலே நல்ல குணம் ஆகலாம். ( இது உண்மையாய் எனக்கு குளிர்காலங்களில் அன்டிபயடிக்ஸ் எடுப்பதினை முற்றாக இல்லாமல் செய்கிறது)
16. நன்றாக சளி பிடித்துக் கொண்டு மூக்கு ஒழுகத்தொடங்கினால் மிளகை நன்றாக இடித்து தூள் ஆக்கி வத்துக்கொண்டு தேனில் கலந்து மூன்று முறை ஒவ்வொருநாளும் சாப்பிட்டு வர இரண்டு நாளில் சரியாகப்போயிரும்.
சளித் தொல்லை
Posted by
இக்பால்
at
8
comments
Labels: வீட்டு வைத்தியம்
இஞ்சியின் மகத்துவம்...
இஞ்சி வியர்வை, உமிழ்நீர் பெருக்கியாகவும், பசி தூண்டியாகவும், வயிற்றில் வெப்பம் பெருக்கி, வாயு வெளியேற்றியாகவும் பயன்படுகிறது.
இதன் வேறு பெயர்கள்: இஞ்சம், வெந்தோன்றி, கொத்தான்.
மருத்துவக் குணங்கள்: இஞ்சிச்சாறு, வெள்ளை வெங்காயச்சாறு அல்லது எலுமிச்சப் பழச்சாறு வகைக்கு 30 மில்லியுடன் தேன் 15 மில்லி கலந்து 15 மில்லியளவாக அடிக்கடி குடித்து வர ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கம் நீங்கும்.
இஞ்சிச்சாறு, மாதுளம் பழச்சாறு, தேன் வகைக்கு 15 மில்லியளவு எடுத்துக் கலந்து 15 மில்லியளவாக 3 வேளை குடிக்க இருமல், இரைப்பு தீரும். 2
00 கிராம் இஞ்சியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கி 200 கிராம் தேனில் ஊறப்போட்டு 4 நாள்கள் கழித்து தினம் காலையில் ஓரிரு துண்டுகள் வெறும் வயிற்றில் 48 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உடன் பிணி நீங்கிப் பித்தம் தணிந்து ஆயுள் பெருகும். நெஞ்சு வலியும், மனத்திடமும் பெற்று முகம் பொலிவும், அழகும் பெறும்.
இஞ்சி முரப்பா சாப்பிட்டு வர வயிற்று மந்தம், வாந்தி, புளி ஏப்பம், மார்புச்சளி, இரைப்பு, உடல் கோளாறு நீங்கும்.
10 கிராம் இஞ்சி, 3 வெள்ளருக்கம் பூ, 6 மிளகு இலைகளைச் சிதைத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 1/4 லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி 2 வேளை குடித்து வர இரைப்பிருமல் (ஆஸ்துமா), நுரையீரல், சளி அடைப்பு நீங்கும்.
முற்றிய இஞ்சியைத் தோல் நீக்கி அரைத்துப் பிழிந்து தெளிய வைத்து இறுத்து சமஅளவு பசும்பால் கலந்து, அக்கலவையுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வாரம் இருமுறை தலை முழுகி வர நீர்க் கோவை, நீர்பீனிசம், தலைவலி, கழுத்து நரம்புப் பிசிவு, தலைப்பாரம், அடுக்குத் தும்மல் நீங்கும்.
இஞ்சியைத் தட்டி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை இறக்கி வடிகட்டி அதனுடன் தேவைக்கேற்ப பனங்கற்கண்டு சேர்த்து அளவோடு சாப்பிட்டு வந்தால் மார்பில் சேர்ந்திருக்கும் சளி, அஜ“ரணம் குணமாகும். இஞ்சியை சமையலுடன் சேர்த்துக் கொண்டால் அண்ட வாயுவை அண்டவிடாமல் விரட்டலாம்.
Posted by
இக்பால்
at
4
comments
Labels: வீட்டு வைத்தியம்
முருங்கைகீரை
முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங் களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம்.
முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும்.
முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர் களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும்.
முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்து.
கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து.
வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கை காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.
முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். தாது விருத்தியை உண்டு பண்ணும். ஆனால் மலபந்தத்தைச் செய்வதில் முருங்கை விதைக்கு முதலிடம் தரலாம்.
முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால்,இரத்த சுத்தியும்,எலும்புகளையும் வலுப்படுத்தும். இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம்,அயம்,வைட்டமின் உள்ளது.
Posted by
இக்பால்
at
15
comments
Labels: கீரையின் பயன்கள்
அகத்திகீரை
தினமும் பகல் உணவில், ஏதாவது ஒரு கீரையை உணவுடன் சேர்த்துக்கொள்வது என்றென்றும் ஆரோக்-கியம் தரும். கொஞ்சம் கசப்பான சுவையுள்ள அகத்திக் கீரை மருத்துவக் குணங்கள் நிரம்பியது. புரதம், இரும்புச் சத்து, சுண்-ணாம்-புச் சத்து, வைட்டமின் ஏ போன்றவை அதிக அளவில் அகத்திக் கீரையில் இருக்கிறது. அகத்திக் கீரையுடன் சின்ன வெங்காயம் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால், குடல் வலிமை பெறும். அரிசி கழுவிய நீரில் அகத்திக் கீரையை வேகவைத்து சூப் செய்து சாப்பிட்டு வந்தால், கல்லீரலும் இதயமும் வலுவாகும். ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் அகத்திக் கீரைக்கு உண்டு. பித்தத்தையும் கபத்தையும் குறைக்கும். வாதத்தை மட்டுப்படுத்தும். உடலின் உஷ்ணத்-தைக் குறைக்கும். கண்கள் குளிர்ச்சி பெறும். மாலைக் கண் நோயைக் குணப்படுத்தும். எந்தக் கீரையாக இருந்தாலும், கீரையை வேக வைத்த நீரை கீழே கொட்டிவிடக் கூடாது. கீரையின் சத்துப் பொருட்கள் அந்த நீரில் இறங்கி-யிருக்கும். அந்த நீரில் சூப் வைத்துச் சாப்பிடலாம். வாயுக் கோளாறு உள்ளவர்கள், அகத்திக் கீரையை அதிகமாகச் சாப்பிடாமல் இருப்பது நல்லது.
இக்கீரையில் அடங்கியுள்ள சுண்ணாம்புசத்து பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகின்றது இக்கீரையில் 73 விழுக்காடு நீரும்,, 8.4 விழுக்காடு புரதமும்,1.4 விழுக்காடு கொழுப்பும்,2.1 விழுக்காடு தாதுப்புக்களும், இருக்கின்றன.
சக்தியை கொடுக்கும் ஆற்றல் இக்கீரையில் அதிகம் இருப்பதைக் காணலாம். 100 கிராம் கீரையில் 1,130 மில்லிகிராம் சுண்ணாம்பு சத்தும், 80 மில்லிகிராம் மணிசத்தும், 3.9 மில்லிகிராம் இரும்புசத்தும் அடங்கியுள்ளன. அகத்தியின் இளம்பூவும் மொட்டுக்களும் உணவாக சமைக்க உதவுகின்றன, பொதுவாக இப்பூவை தனியாக சமைத்து உண்பதில்லை. ஆனால் வடநாட்டில் பூவையே தனியாக சமித்து உண்கின்றனர். அகத்திக்கீரையில் இலையும், பூவும், காயும், பட்டையும்,வேரும் மருந்தாக பயன்படுகின்றன.
அகத்திகீரை பொதுவாக சிறுகைப்பு ருசி உடையது. இச்சுவை குடலில் உண்டாகும் நச்சு நீர்களை முறித்து வெளியெற்றும் குணமுடையது. குடலில் தேங்கும் மலம் மற்றும் நிணநீர் ஆகிய அசுத்தங்களை சுத்தம் செய்து, மலச்சிக்கலை நீக்கி மலத்தி உடைத்து வெளியேற்றும் தன்மை உடையது. மேலும் இக்கைப்பு சுவை பித்தச் சூடு, தொணடைப்புண், குடல்புண், அரிப்பு, சொறிசிரங்கு முதலிய தோல் நோய்கள் இக்கீரையை உண்பதால் குணமாகும். தொண்டைப்புண் மற்றும் தொண்டைவலிக்கு அகத்திக்கீரையை பச்சையாக மென்று சாற்றை உள்ளே விழுங்க இந்நோய்கள் குணமாகும். இரத்த பித்தம், இரத்த கொதிப்பு ஆகியவை இக்கீரை உண்பதனால் அகலும். இக்கீரை காய்ச்சலை குறைத்து உடல்சூடை சமன்படுதும் இயல்புடையது. வெய்யிலில் சுற்றி அலிபவர்கள், தேயிலை போன்ற பானங்களைப் பருகி பித்தம் அதிகப்ப்ட்டவர்கள், மலச்சிக்கல் உள்ளோர் அக்த்திக்கீரை வாரம் ஒரு முறை உண்பது நல்லது.
குறிப்பு :பொதுவாக, மாதத்துக்கு இரண்டு நாட்களுக்கு மேல் அகத்திக் கீரையை உட்கொள்ளக் கூடாது! அகத்திக் கீரையை நன்றாக வேகவைத்துத் தான் சாப்பிட வேண்டும். கீரையின் கலர் மாறும் அளவு சமைக்க வேண்டும். "முருங்கக் கீரை வெந்து கெட்டது. அகத்திக் கீரை வேகாமல் கெட்டது" என்பார்கள் ஊர்ப்பக்கம்.
அத்தோடு கீரை உணவை இரவில் கண்டிப்பாக சாப்பிடக் கூடாது. ஏனென்றால் அவை ஜீரணமாக 8 மணி நேரம் ஆகும். இரவில் உண்டால் சரியாக செரிக்காது
Posted by
இக்பால்
at
0
comments
Labels: கீரையின் பயன்கள்
மணத்தக்காளி கீரை
தினமும் உணவுடன் சேர்க்க வேண்டிய கீரை வகைகளில் மணத்தககாளியும் ஒன்று.
அதிக அளவில் நீர்விட்டு சுண்டக் காய்ச்சி....... மிள்கு, சீரகம், உப்பு சேர்த்து எண்ணெய் விட்டு தாளித்து குழம்பு செய்யலாம். பருப்புடன் சேர்த்து கூட்டு வைக்கலாம். பொரியலகச் செய்தும் சாப்பிடலாம். சாம்பார் செய்யும் போதும் அதில் பயன்படுத்தலாம். இப்படி பயன்படுத்தும்போது, கீரை சாப்பிட பிடிக்காத குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
மணத்தக்காளியில் நிறைய உயிர்சத்துக்களும்,புரத சத்துக்களும், இரும்பு சத்தும் உண்டு. இந்த கீரையில் தக்காளி வடிவில் சிறிய அளவில் மணிமணியாக காய்கள் இருப்பதால் மணித்தக்காளி என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் காயுடன் கீரையையும், பச்சை பருப்பயையும் கலந்து உண்டு வந்தால், உடல் சூடு குறையும், மூலச்சூட்டை தணிக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு.
சித்த மருத்தவத்தில் குடல் புண்களை குணப்படுத்துவதில் மணத்தக்காளிக்கு முக்கிய இடம் உண்டு. காமாலை நோயாளிகளுக்கு இந்தக் கீரையை நன்றாக இடித்து சாறு எடுத்து, பசும்பால் கலந்து தினசரி காலையில் வெறும் வயிற்றில் கொடுக்கும்போது ஒரு வாரத்திலெயே காமாலை நோய் குணமாகிவிடும்.
மணத்தக்காளி கீரையில் உடல் நலத்துக்கான சத்துக்கள் நிறைய இருக்கின்றன. ஆதலால், குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்து வாரம் ஒரு முறையாவது இந்தக் கீரையைச் சாப்பிடப் பழக்கப்டுத்துவது நல்லது.
பயன்கள் : அல்சரை ஆற்றுவதில் முதன்மையானது, குடலுக்கு பலமளிப்பது, பெண்மையை வளர்ப்பது, மங்கையருக்கு மார்பை வளரச்செய்வது, கருப்பை குறைப்பாட்டை நீக்குவது, குடற்புழுவை அகற்றுவது.
Posted by
இக்பால்
at
5
comments
Labels: கீரையின் பயன்கள்
வாயு தொல்லை
நமக்கு உண்டாகும் சில சிறு உடல்நலக் கேடுகளுக்கெல்லாம், வீட்டில் அம்மாவோ, பாட்டியோ அவர்களின் கைப் பக்குவத்தில் கஷாயமோ அல்லது மருந்தாக பயன்படும் உணவோ தயார் செய்து கொடுத்து, பிரச்சனையை தீர்த்து விடுவர். இந்த வீட்டு வைத்தியம் சின்ன சின்னப் பிரச்சனைகளுக்குதான் தீர்வாக இருக்கும். இப்பதிவில் வாயு தொல்லைக்கு என்ன தீர்வு காண்பது என்பதை பற்றி என் பாட்டி சொன்ன குறிப்பு.
வயிற்றில் ஏற்படும் வாயுவைப் பொறுத்தவரை அவ்வப்போது நல்ல பலன் கிடைக்கக்கூடிய வீட்டு வைத்திய முறைகளை செய்து குணமாக்கிக் கொள்ளலாம். ஆனால், நாம் உண்ணும் உணவு, ஜீரணிக்கும் திறன், உடம்பில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்கள் இவற்றைப்பொறுத்து வயிற்றில் வாயுத் தொல்லை இடையிடையே ஏற்படத்தான் செய்யும். அதனால், எப்போதெல்லாம் உங்களுக்கு இந்த பிரச்சனை வந்தாலும் அப்போது இந்த வைத்தியத்தை செய்து அதிலிருந்து மீண்டுக் கொள்ளுங்கள்.
பூண்டு - 50 கிராம்
பெருங்காயம் - 20 கிராம்
கருப்பட்டி - 30 கிராம்
இந்த மூன்று பொருட்களையும் எடுத்துக்கொள்ளுங்கள். முதலில் பூண்டு பற்களை கத்தி முனையால் மெதுவாக குத்தி குத்திவிட்டு, தோலுடன் நெருப்பில் காட்டி வேகும் அளவு சுட்டு தோலை உரித்துக்கொள்ளுங்கள். பெருங்காயத்தையும் நெருப்பில் (தீயாமல்) சுட்டு எடுத்து, கருப்பட்டி சேர்த்து மூன்றையும் மைய அரைத்து ஒரு பாட்டிலில் எடுத்துக்கொள்ளுங்கள். புளியங்கொட்டையைவிட சற்று பெரிய உருண்டையாக அதிலிருந்து எடுத்து, ஒரு நாளைக்கு மூன்று அல்லது ஐந்து வேளை தண்ணீருடன் (மாத்திரைபோல்) வாயில் போட்டு குணமாகும்வரை சாப்பிடுங்கள். பெரும்பாலும் ஒரு நாளிலேயே குணம் தெரியும். !
கருப்பட்டி கிடைக்காதவர்கள் இந்த முறையை பயன்படுத்தி பார்க்கலாம். இதுவும் உடனே பயன் அளிக்க கூடியது.
வாயு தொல்லை ஏற்பட்ட சமயம் பூண்டு பல் 4 (அடுப்பில் காட்டி சுட்டது தோலை நீக்கி விடவும்), 1 தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்து கொதிக்கும் வெந்நீரில் போட்டு சிறிது நேரம் கொதிக்கவிடவும்.பின் அந்த நீரை வடித்து சிறிது சூட்டுடன் இருக்கும் போதே குடித்து வந்தால் கொஞ்ச நேரத்திலேயே வாயு தொல்லை நீங்கி விடும்.
Posted by
இக்பால்
at
2
comments
Labels: வீட்டு வைத்தியம்
திராட்சை பழம்
என்னங்க! இதற்கு முன்னாடி சொன்ன பழங்களைப் பற்றி படித்து பயன் அடைந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இன்றைக்கு திராட்சையின் பயன்களை தெரிங்சிக்குங்க,..
திராட்சைப் பழங்களில் சர்க்கரை அதிக அளவில் ‘க்ளுகோஸ்’ வடிவில் இருக்கிறது. உடனடி சக்திக்கு திராட்சைப் பழங்கள் ஒரு வரம். இதில் அதிக அளவில் சிறுநீரை வெளியேற்றும் சக்தி இருப்பதால், சிறுநீர்க் கற்கள் மற்றும் சிறுநீர்ப்பை கற்கள் உருவாவதை தடுக்கும். சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் இருப்பதால், சிறுநீரக அழற்சியைத் தடுக்கும்.
குடிப்பழக்கத்தை நிறுத்துகிறவர்களுக்கு அதிக தாகம் ஏற்படும். அந்தச் சமயங்களில் திராட்சைப் பழங்களைப் பயன்படுத்தலாம். தாகத்தைக் கட்டுப்படுத்துவதில் திராட்சைப் பழங்கள் அபரிமிதமாகச் செயல்புரிகின்றன. இரத்தச் சுத்திகரிப்பிலும், அதனைக் குளிர்ச்சிப்படுத்துவதிலும் திராட்சைகள் ஈடுபடுவதால் உடல்சூடு தணியும்.திராட்சையில் இருக்கிற மேலிக், சிட்ரிக் மற்றும் டார்டாரிக் ஆசிட், செல்லுலோஸ் போன்றவை குடல் இயக்கத்தைத் துரிதப்படுத்துவதால் நீண்ட நாள் இருக்கிற மலச்சிக்கல் பிரச்னைகளுக்குப் பெரிதாக உதவும். மேற்சொன்ன இந்த அமிலங்கள் கல்லீரலைத் தூண்டுவதால் அதன் குறைபாடுகளிலும் பயன்தருகின்றன.
இரத்த சோகையைக் கட்டுப்படுத்துவதிலும், இருதயத்தைப் பாதுகாப்பதிலும் திராட்சைப் பழங்கள் அதிக இடத்தை எடுத்துக் கொள்கின்றன. இதில் இருக்கிற ‘எலாஜின் அமிலம்’ கான்ஸர் செல்களுக்கு எதிரி என்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
கலோரி அளவு : ஒரு 100 கிராம் அளவில் 50 கலோரி சக்தி இருக்கிறது.1
00 கிராமில் : நீர் 92%
மாவுச்சத்து 10.2%
தாதுக்கள் 0.4%
பாஸ்பரஸ் 20 மிகி
வைட்டமின் ஏ 15 IU
வைட்டமின் சி 20மி.கி.
புரோட்டின் 0.8%
கொழுப்பு 0.1%
சுண்ணாம்புச்சத்து 20மி.கி.
நியாசின் 0.3மி.கி
இரும்பு 0.2மி.கி.
Posted by
இக்பால்
at
2
comments
Labels: பழங்களின் பயன்கள்

