நம் வீட்டில் அடிக்கடி உபயோகப் படுத்தப்படும் பொருட்களின் பயன்கள்
இஞ்சி
வியாதிக் கிருமிங்க உடம்பை அண்ட விடாம கோட்டை மாதிரி காக்கறதுல இஞ்சிக்கு மிஞ்சி எதுவுமில்ல! விரல் நீளத்துக்கு ஒரு துண்டு இஞ்சியை எடுத்து தோல் நீக்கிட்டு நசுக்கி, சாறு எடுத்துக்கோங்க. சட்டில ஒரு ஸ்ப10ன் சர்க்கரையை போட்டு வறுத்து சர்க்கரை சிவந்ததும் இஞ்சிச் சாறை விடணும். சர்க்கரை முதல்ல கெட்டியாகி அப்புறம் கரைஞ்சதும் அடுப்புலருந்து இறக்கி, அரை டம்ளர் பால் சேர்த்து குடிக்கணும்.
எலுமிச்சைப் பழம்
வாந்தியை நிறுத்தும், களைப்பைப் போக்கும், பித்த சம்பந்தமான கோளாறுகளைப் போக்கும், தாகத்தை தணிக்கும். வாய்வுக் கோளாறுகளைப் போக்கும். அளவு மீறிய வயிற்றுப் போக்கை நிறுத்தும், இருமலைக் குணப்படுத்தும். மலச்சிக்கலைப் போக்கும், வயிற்று வலியைப் போக்கும்.
பெருங்காயம்
மலக் கிருமிகளை வெளியேற்றி விடும். கபத்தை உடைத்து வெளியேற்றும். வாத சம்பந்தமான வியாதிகளைத் தணிக்கும். விஷப் பூச்சிகளின் விஷத்தை முறித்துவிடும். மூலரோகத்தை படிப்படியாகக் குணப்படுத்தும். வாயுவை நீக்கும்.
வெந்தயம்
பதார்த்தங்களை தாளிக்கும் பொழுது வெந்தயத்தை எண்ணெயில் போட்டு சிவக்க வைத்துத் தாளிப்பார்கள். இது பதார்த்தத்திற்கு நல்ல மணத்தைத் தரும். உடல் உஷ்ணத்தைத் தணித்து சமநிலையில் வைக்கும். ரத்த பிரமேகம் என்ற நோயைக் குணப்படுத்தும். காச நோயைக் குணப்படுத்தும். சீத பேதியைக்கூட நிறுத்தும்ää தாதுவை விருத்தி செய்யும்.
Labels: பாட்டி வைத்தியம்
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
சூப்பர் அண்ணா குட்டீஸ் கார்னர்ல ரெக்கமண்ட் பண்ணிருக்கோம். நன்றி
அடடா எல்லாம் நல்ல விஷயங்களா இருக்கே. நன்றிங்க இக்பால்.
உங்கள் பக்கத்தை இன்று தான் பார்த்தேன். மிகவும் பயனுள்ளதாக இருக்கு.
Post a Comment