இன்றைக்கு சமையலுக்கு உபயோகப்படும் இரண்டு காய்களைப் பற்றி சிறு குறிப்பு.
கேரட்
இது இயற்கையாகவே இனிப்புத் தன்மை கொண்டுள்ளபடியால் பச்சையாக சாப்பிட மிகவும் சுவையாய் உள்ளது. சமைத்து உண்பதைவிட பச்சையாக சாப்பிடுவதின் மூலம் அதில் அடங்கியுள்ள பெரும்பான்மையான சத்துக்கள் விரயம் ஆகாமல் நமக்கு கிடைக்கும். இதில் வைட்டமின் 'ஏ' செறிந்துள்ள காரணத்தால், ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது. அது மட்டுமன்றி இதில் அடங்கியுள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்புகளை கரைக்கும் திறன் கொண்டது. உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை தினமும் காரட் சாப்பிடுவதன் மூலம் சற்று குறைக்க இயலும். இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தியும் செய்கின்றது. குடல் புண்கள் உண்டாகாமல் தடுக்கின்றது. வாய் துர்நாற்றத்தை போக்கும் வல்லமை கொண்டது. பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வர ஆண்மை சக்தி அதிகரிக்கும். கேரட் சாற்றுடன் எலுமிச்சை சாறு சிறிது கலந்து சாப்பிட பித்த கோளாறுகள் சரியாகும்.
வாழைக்காய்
வாழைக்காயில் இரும்புச்சத்துடன் நிறைய மாவுச்சத்து இருக்கிறது. இதனால் உடல் பருக்கும். உடலுக்கு நல்ல வளர்ச்சி கிடைக்கும். பசியை அடக்கும். இதனுடன் மிளகு சீரகம் சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது. வாயால் ரத்தம் கக்குபவர்களுக்கும், கிராணி, நீரழிவு உள்ளவர்களுக்கு பத்திய உணவாக வாழைக் கச்சல் பயன்படும்.
வாழைக்காயைச் சமைக்கும்போது மேல் தோலை மெல்லியதாகச் சீவியெடுத்தால் போதும். உள்தோலுடன் சமைப்பதே சிறந்தது. சிலர் இதுபோன்று சீவியெடுத்த தோலை நறுக்கி வதக்கி, புளி, மிளகாய் சேர்த்து துவையலாகச் செய்து உண்பார்கள். பொதுவாக கேரளத்தில் இந்தப் பழக்கம் அதிகம் இருக்கிறது.
இப்படி துவையலாக செய்து சாப்பிடுவதால் ரத்த விருத்தியும், பலமும் உண்டாகும். வாழைக்காய் சாப்பிடு வதால் வயிறு இரைச்சல், கழிச்சல், வாயில் நீர் ஊறுதல், இருமல் ஆகியவையும் நீங்கும். ஆனால் வாய்வு மிகும். அதுபோல வாழைப்பிஞ்சு சாப்பிடுவது பத்தியத்திற்கு ஏற்றதுதான் என்றாலும் மலத்தை இறுக்கி விடும்.
காய்கறிகளின் குணங்கள்
Labels: காய்கறிகள்
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
நல்கு சொல்லியுள்ளீர்.
இந்த வாழைக்காய் தோல் சம்பல் பிரமாதமானது.
என் வலைப்பக்கம் வந்து பின்னூட்டமிட்டதிற்கு நன்றி
Sit y don't u promote any ad sir?
Post a Comment