Get paid To Promote at any Location

வாழைப்பழம்



சோடியம் குறைவாகவும், அதிகம் பொட்டாசியமும், கால்சியமும், இரும்பும் இருக்கிறது. மிக சுலபத்தில் ஜீரணமாகக்கூடிய சர்க்கரை இருப்பதால் உடனடி சக்திக்கு நிறைய உதவும்.வாழைப்பழத்துடன் ஒரு டம்ளர் பால் சேர்த்தால் போதும் என்கிறார்கள் உணவுத்துறை வல்லுநர்கள். இதை ‘பேலன்ஸ்டு டயட்’ என்கிறார்கள்.இதில் இருக்கிற ‘செரடோனின்’ என்கிற பொருள் மன அழுத்தத்திற்கு உதவக்கூடியது. என்னவென்று தெரிந்துகொள்ள முடியாத பல அலர்ஜிகளுக்கு, வாழைப்பழம் தொடர்ந்து சாப்பிட தீர்வு கிடைக்கும் என்கிறார்கள். இரும்புச் சத்து அதிகம் இருப்பதால், இரத்தசோகைக்கு மிக நல்லது. இரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்தியைத் துரிதப்படுத்துகிறது. வாழைப்பழத்தில் கண்டுபிடிக்கப்படாத வைட்டமின் ‘ஹி’ இருக்கிறது. இது கான்ஸர் நோய்க்கு எதிரி. அல்சர் புண்களை ஆற்றுவதிலும் வாழைப்பழத்திற்கு மகத்தான சக்தி உண்டு.


கலோரி அளவு: ஒரு 100 கிராமில் 116 கி.கலோரி.


100 கிராம் வாழைப்பழத்தில்:

நீர் 61.4%

மாவுச்சத்து 36.4.%

சுண்ணாம்புச்சத்து 0.01%

கரோட்லின் 78

மை.கிரிபோபிளேவின் _ 0.08 மி.கி.

வைட்டமின் ‘சி’ 7 மி.கி.

புரோட்டின் 1.3%

கொழுப்பு 0.2%

இரும்பு 0.04%

தயமின் 0.05 மி.கி.

நியாசின் 0.5 மி.கி.

2 comments:

said...

நன்றாக தூக்கம் வரும் என்று யாரோ சொன்னதை வைத்து என் மகன் இப்போது சாப்பிட ஆரம்பித்திருக்கான்.இதற்கு முன்னால் அதைக் கண்டாலே காத தூரம் ஓடுவான்.இது உண்மையா?

Anonymous said...

வாழைப்பழத்துடன் ஒரு டம்ளர் பால் சேர்த்தால் ‘பேலன்ஸ்டு டயட்’...................


Thats why all 'First Night' starts with this?

Donot take it as adult question?