தினமும் உணவுடன் சேர்க்க வேண்டிய கீரை வகைகளில் மணத்தககாளியும் ஒன்று.
அதிக அளவில் நீர்விட்டு சுண்டக் காய்ச்சி....... மிள்கு, சீரகம், உப்பு சேர்த்து எண்ணெய் விட்டு தாளித்து குழம்பு செய்யலாம். பருப்புடன் சேர்த்து கூட்டு வைக்கலாம். பொரியலகச் செய்தும் சாப்பிடலாம். சாம்பார் செய்யும் போதும் அதில் பயன்படுத்தலாம். இப்படி பயன்படுத்தும்போது, கீரை சாப்பிட பிடிக்காத குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
மணத்தக்காளியில் நிறைய உயிர்சத்துக்களும்,புரத சத்துக்களும், இரும்பு சத்தும் உண்டு. இந்த கீரையில் தக்காளி வடிவில் சிறிய அளவில் மணிமணியாக காய்கள் இருப்பதால் மணித்தக்காளி என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் காயுடன் கீரையையும், பச்சை பருப்பயையும் கலந்து உண்டு வந்தால், உடல் சூடு குறையும், மூலச்சூட்டை தணிக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு.
சித்த மருத்தவத்தில் குடல் புண்களை குணப்படுத்துவதில் மணத்தக்காளிக்கு முக்கிய இடம் உண்டு. காமாலை நோயாளிகளுக்கு இந்தக் கீரையை நன்றாக இடித்து சாறு எடுத்து, பசும்பால் கலந்து தினசரி காலையில் வெறும் வயிற்றில் கொடுக்கும்போது ஒரு வாரத்திலெயே காமாலை நோய் குணமாகிவிடும்.
மணத்தக்காளி கீரையில் உடல் நலத்துக்கான சத்துக்கள் நிறைய இருக்கின்றன. ஆதலால், குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்து வாரம் ஒரு முறையாவது இந்தக் கீரையைச் சாப்பிடப் பழக்கப்டுத்துவது நல்லது.
பயன்கள் : அல்சரை ஆற்றுவதில் முதன்மையானது, குடலுக்கு பலமளிப்பது, பெண்மையை வளர்ப்பது, மங்கையருக்கு மார்பை வளரச்செய்வது, கருப்பை குறைப்பாட்டை நீக்குவது, குடற்புழுவை அகற்றுவது.
மணத்தக்காளி கீரை
Labels: கீரையின் பயன்கள்
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
நன்றி நன்றி... உங்க பதிவுகள் pdf ஆக மாற்றி எங்க TEACH Project யூஸ் பண்ண அனுமதி உண்டா
மணத்தக்காளி பழத்தை கூட அப்படியே சாப்பிடலாம். நன்றாக இருக்கும்.
பயனுள்ள பதிவுகள் - குட்டிகளின் Teach Project - லே பயன் படுத்தலாமே !! அனுமதியுங்களேன் !!
என்னுடைய பதிவுகள் தங்களுக்கு உபயோகப்படுகிறது என்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை கொடுக்கிறது. பதிவை PDFயாக மாற்ற தடையேதும் இல்லை.
How To Play Baccarat | Bet with a Card at a Casino - Wolverione
Baccarat is one of 메리트 카지노 쿠폰 the easiest casino games to learn with this type หารายได้เสริม of strategy and you have a quick start. Here are some 바카라 tips to how to play Baccarat with:.
Post a Comment