Get paid To Promote at any Location

கட்டுடலை பேணிக்காக்கும் புரதம். . .

ஆரோக்கிய வாழ்விற்கு அடிப்படை சரிவிகித உணவுகள், சரிவிகித உணவில் புரதச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, உயிர்ச்சத்துகள் போன்ற சத்துக்கள் உடல்நலத்தை பாதுகாக்க துணை புரிகின்றன. இதில் புரதச் சத்து மிக முக்கிய பங்காற்றுகிறது. உடல் வளர்ச்சிக்கும், உடல் பராமரிப்பு பணிக்கும் புரதச் சத்து இன்றியமையாததாகிறது. மேலும் புதிய திசுக்கள் வளர்ச்சி பெறச் செய்யவும் உடலில் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கவும் புரதம் துணை புரிகிறது.

புரதச் சத்துக்களின் பயன்கள் :

எலும்பு வளர்ச்சி, மண்ணீரல், கல்லீரல், திசுக்கள் வளர்ச்சி, பித்த நீர்ப்பை, நிணநீர்ப்பை, கணையம், தைமஸ் இவற்றின் பண்புகளையும் பணிகளையும் செவ்வனே செய்வதில் துணை புரிகிறது. கொழுப்பு சக்தியை உபயோகிப்பதிலும் வெள்ளை மற்றும் சிவப்பணுக்களின் உற்பத்தி, உணவு செரித்தல், உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுத்தல் போன்ற பணிகளை செவ்வனே செய்கின்றது. மேலும் வயது முதிர்வதை தள்ளிப்போடுதல், திசுக்களை புதுப்பித்தல், இரத்த சோகையை வரும்முன் காத்தல், பற்கள், நுரையீரல், இரத்தக் குழாய்கள், இதயம் இவற்றை பாதுகாப்பதிலும் பலப்படுத்துவதிலும், தசை திசுக்களின் ஆற்றலை அதிகப்படுத்துவதிலும் புரதத்தின் பங்கு இன்றியமையாததாகிறது. முடி உதிர்வதை தடுத்து மயிர்க்கால்களுக்கு ஆரோக்கியத்தையும், பளபளப்பையும் கொடுத்து, கட்டுடல் பெற செய்து அழகும் வனப்பும் பெற செய்ய புரதச் சத்து உதவுகிறது.

புரதச்சத்து காணப்படும் காய் மற்றும் கனி வகைகள்

காய்கறிகள்


கீரைகள், காரட், பீட்ரூட், வெள்ளரிக்காய், முள்ளங்கி, தக்காளி, புதினா, பூண்டு, தேங்காய், முளைத்த பயறு வகைகள், முளைவிட்ட சோயா, முட்டைகோஸ், காலிபிளவர், முளைவிட்ட கொண்டைகடலை, வெங்காயம்.

பழங்கள்

கொய்யா, திராட்சை, ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி, அன்னாசிப்பழம், பப்பாளிப்பழம், ப்ளம்ஸ், மாதுளம் பழம், அத்திப்பழம்.

முதல் தரமான புரதச் சத்து காய் கனிகளிலா அல்லது இறைச்சி வகைகளிலா என்றால் எதுவும் முதல்தரம், இரண்டாம் தரம் என்றில்லை. எல்லாம் ஒரே தரமேதான்.

மாமிசம் எல்லா புரத சத்துக்களையும் ஒரே உணவில் அபரிமிதமாக தான்.

காய்கனிகளில் புரதச்சத்து தனித்தனியே இருக்கும். அவற்றை தனித்தனியே உட்கொள்ள அவை எல்லாம் ஒருங்கிணைந்து வேலை செய்யும். எனவே சைவ உணவு உட்கொள்பவர்கள் கவனமாக உணவை சரிவிகிதத்தில் சேர்த்து உண்ணவும்.

காரட்டிலும், பீட்ரூட்டிலும், கீரை வகைகளிலும் ஐசோலூசின் மற்றும் மெத்தியோனின் என்ற புரதசத்துக்கள் காணப்படுவதில்லை.

ஐசோலீசின் என்ற புரதம் : தைமஸ் சுரப்பிகள், மண்ணீரல், பிட்யூட்டரி சுரப்பி, இரத்த ஹீமோகுளோபின்களின் ஆற்றலை மேம்படுத்துகிறது. எனவே, ஐசோலீசினில் காணப்படும் உணவான பப்பாளிப்பழம், தேங்காய் போன்றவற்றைச் சாப்பிட வேண்டும்.

இந்தப் புரதம் உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், இரத்தச் சிவப்பு அணுக்களையும் ஹீமோகுளோபின் என்ற இரத்த திரவத்தையும் உற்பத்தி செய்வதில் பயன்படுகிறது.

இதே போல மெத்தியோனின் என்ற புரதமும், காரட், பீட்ரூட்களில் காணப்படுவதில்லை.

மெத்தியோனின் புரதத்தின் பணி இரத்த சிவப்பு அணுக்கள், மண்ணீரல், பித்த நீர் சுரப்பிகளில் சுரக்கும் ஆற்றலை மேம்படுத்த உதவும்.

முட்டைகோஸ், காலிபிளவர், பூண்டு, அன்னாசி, ஆப்பிள் போன்றவற்றில் மெத்தியோனின் உள்ளது. இவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது.

எனவே புரதம் காணப்படும் காய்கனிகளை அளவோடு சரிவிகிதத்திலும் சேர்த்துக் கொண்டால் உங்கள் அறிவுத் திறனையும், உடல் திறனையும் மேம்படுத்தி கட்டுடலையும் கண்டிப்பாகப் பெறலாம்.

நன்றி : வெப்துனியா

1 comments:

Anonymous said...

நல்ல பதிவு. தொடர்ந்து எழுதுங்கள்