Get paid To Promote at any Location

கண்ணும் உணவும்

நம் தினசரி உணவுப் பழக்க வழக்க முறைகளிலேயே கண்களைப் பாதுகாக்கும் விஷயங்கள் அடங்கி உள்ளன, உதாரணமாக பச்சைக் காய்கறிகள் கண்கள் ஆரோக்கியத்திற்கு ஆற்றும் பணிகளைப் பற்றி நாம் சுருக்கமாக பார்ப்போம்.

பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சியும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகளின் முதன்மை ஆதாரங்களும் அடங்கி உள்ளன. பார்வைக்கு தெரியும் ஒளியின் நீலமான பகுதிக்குத்தான் கண்களின் விழித்திரை அதிகமாக பாதிக்கப்படுகிறது, இது கண் விழித்திரைக்கு பின்பகுதியில் உள்ள ஆயஉரடய-வை சேதம் செய்யலாம். இந்தப் பகுதிதான் நம் கூர்மையான பார்வைக்கு உதவும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. பச்சைக் காய்கறிகளுள்ள வைட்டமின் சத்துகள் (Anti - Oxidants) Macula -வை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது.

பசலைக் கீரை, முருங்கை, அகத்திக் கீரை, பொன்னாங்கன்னி, முளக்கீரை, அரக்கீரை, வெந்தயக் கீரை ஆகிய கீரைகளில் இரும்பு, ஃபோலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி-12 ஆகிய சத்துக்கள் அடங்கியிருப்பதால் தினசரி உணவுப் பழக்க வழக்கத்தில் இவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வது நலம்.

தாவர உணவு வகைகளில் பெறப்படும் இரும்புச்சத்து, இறைச்சியில் கிடைக்கும் இரும்புச்சத்தை விட குறைவாகவே உடலில் கலந்தாலும், வைட்டமின் சி-ஆல் இரும்புச் சத்து உடலில் கலப்பது மேம்படுகிறது. பச்சைக் காய்கறிகளுடன் சாலட் மற்றும் எலுமிச்சை நம் பார்வையை பெரிதும் கூர்மையாக்குகிறது. தினசரி சமையல் முறையில் பல வகையான பச்சை காற்கறிகளை சேர்த்துக் கொள்ளவும். ஆனால் அதை கூடிய மட்டும் அதன் சத்துகள் குறையா வண்ணம் சமைப்பது அவசியம்.

Anti oxidants

நம் உடலில் தோன்றும் அனைத்து நோய்களுக்கும் காரணம் Free Radical fns என்பது அனைவராலும் ஏற்கப்பட்ட மருத்துவ உண்மை, நம் உயிரைத் தக்கவைப்பது பிராணவாயு. ஆனால் அதே பிராணவாயுதான் நம் நோய்களுக்கும், மரணத்திற்கும் காரணம் என்று நம்மில் பலருக்கு தெரியாது.


வைட்டமின் இ, சி மற்றும் ஏ, தக்காளி, திண்ணிய பூக்கோசு வகை, காலிஃப்ளவர், பூண்டு, மிளகு, பசலை, தேயிலை, காரட், சோயா மற்றும் முழு தானிய வகைகளிலிருந்து நாம் Anti-oxidant களை பெறலாம். நிறக்கலவை அதிகமுள்ள பழங்கள், காய்கறிகள் ஆகியவைகளில் தாவர உயிர்ச்சத்துகள் அதிகம் உள்ளன.

வைட்டமின் ஏயில் கண்ணையும், மூளையையும் இணைக்கும் முக்கிய சத்து அடங்கியுள்ளது. கண் விழித்திரையிலுள்ள ரோடோஸ்பின் என்ற புரதத்தில் வைட்டமின் ஏ உள்ளது. பார்வையில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் ஏ சத்து பற்றாக்குறையால் முதலில் தோன்றும் அறிகுறி மாலைக்கண் நோய்.

காரட்டில் அதிகமான வைட்டமின் ஏ உள்ளது. வைட்டமின் ஏ வாக நம் உடலில் மாற்றம் அடையும் பீட்டா கரோடின் மற்றும் அதிநிற பழங்களிலும், பச்சைக் காய்கறிகளிலும் வைட்டமின் ஏ உள்ளது.

வைட்டமின் ஏ உணவு : தக்காளி, பசலை, லிவர், முட்டை, நிறமயமான காய்கறிகள், கேரட், பப்பாளி மற்றும் பச்சை இலைகளில் உள்ளது.

கண் பராமரிப்பில் அமினோ அமிலங்கள் :

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு கண்புரை நோய், க்ளுகோமா என்ற கண் விழி விறைப்பு நோய், குறிப்பாக கண் உள்ளிருக்கும் ரத்தக் குழாய்களை சேதடையச் செய்யும் டயாபெடிக் ரெடினோபதி ஆகியவைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. நம் உடலில் இயற்கையாகவே சுரக்கும் அமினோ அமிலங்கள் அல்லது புரத அமிலங்கள் இந்நோய்களை தடுக்க பெரிதும் உதவுகிறது.

உடலில் அதிகமாக சுரக்கும் குளூக்கோஸினால் கண்லென்ஸ் சேதமடைவதிலிருந்து புரத அமிலங்கள் நம்மை காக்கின்றன. சர்க்கரை நோயாளிகளுக்கு அமினோ அமிலச் சத்துகளை வாய் வழியாக கொடுப்பதன் மூலம் சர்க்கரை நோயின் புறவிளைவுகளை தடுக்க முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இறைச்சி, மீன் மற்றும் பாலில் நமக்குத் தேவையான 8 முக்கிய அமினோ அமிலங்கள் உள்ளன. அரிசி, பட்டாணி, பீன்ஸ், அவரை, மொச்சை, துவரை, உளுந்து பயறு போன்றவற்றில் இறைச்சியில் உள்ள அளவுக்கு அமினோ அமிலங்கள் உள்ளன.

கண்கள் உங்களைக் காக்க, நீங்கள் கண்களை காத்துக் கொள்ளுங்கள்

நன்றி : யாழ்

5 comments:

Anonymous said...

உபயோகமான பதிவு. நன்றி நண்பரே!

said...

நல்ல பதிவு.

நிறைய பேர்களால் கவனிக்கபடாமல் இருக்கிறதே :(

said...

வருகை தந்தமைக்கு நன்றி நண்பரே...

Anonymous said...

பதிவுகள் தொடர என் வாழ்த்துக்கள்

said...

நண்ப இக்பால் - கீரைகளைப் பற்றியும் - கண்ணினைப் பற்றியும் அரிய தகவல்கள் பல பகிர்ந்தமை நன்று - நல்வாழ்த்துகள் -