Get paid To Promote at any Location

நோயற்ற வாழ்க்கைகு நாடுவோம் அரைக்கீரை

தினந்தோறும் உண்ணும் கீரையில் அரைக்கீரை முதலிடத்தை பெறுகிறது. இக்கீரையில் இரும்பு சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. பத்திய வகை உணவுக்கு தோதான கீரை இது, இக்கீரை தாதுவை வலுப்படுத்தி உடல்பலத்தை பெறுக்குவதில் தூதுவளைக்கு நிகரானது என்றும், உடலில் தேங்கும் வாய்வு, வாதநீர்களை போக்குவதில் முருங்கைகீரைக்கு சமமானது என்றும் கூறுவார்கள். நோயால் தளர்வுற்ற உடலுக்கு வலுவும்,பலனும் தரக்கூடியது. அரைக்கீரையை நாள்தோறும் உணவுடன் சேர்த்து உண்டுவர உடலுக்கு அழகும் வலுவும் கொடுக்கும்.
இந்த கீரையை பழுப்பு இலைகள் இல்லாமல் சுத்தமாக ஆய்ந்து கழுவி விட்டு சமைக்க வேண்டும். இக்கீரையில் வைட்டமின் அ, சி இரண்டும் அதிக அள்வில் உள்ளன. மேலும் புரத்ச்சத்து, சுண்ணாம்பு சத்து மற்றும் நார்சத்துகளுக்கும் குறைவில்லை.இதனை அடிக்கடி உபயோகித்து வந்தால் உடலின் எல்லா பாகங்களும் சீரான வளர்ச்சியை பெறும்.தேகபலமும், ஞாபக சக்தியும் அதிகரிக்கும், மலச்சிக்கலை போக்கி குடலை சுத்தமாக வைத்திருக்க உதவும். இதயத்திற்கு வலிமை தரும்.
இக்கீரை சித்த வைத்தியத்திலும் அதிகமாக பயன்படுகிறது.இக்கீரையின் விதையிலிருந்து தயாரிக்கப்படும் அரைகீரை தைலம் மிகவும் புகழ்பெற்ற தைலமாகும். இது கண்ணுக்கு குளிர்ச்சியையும், தலைமுடி செழித்து வளரவும் உதவுகிறது. இக்கீரைக்கு மற்ற கீரைகளை பிடுங்குவதுபோல் செடிகளை வேரோடு பிடுங்க கூடாது. வேண்டிய கீரைகளை கத்தி அல்லது கத்திரியை கொண்டு வெட்டி எடுத்துக் கொள்ளலாம், அல்லது கையால் கிள்ளி பறித்துக் கொள்ளலாம். இவ்வாறு கிள்ளி பறிப்பதனால்தான் கிள்ளுக்கீரை என்றும் அழைக்கிறார்கள்.
இக்கீரையோடு மிளகு, பூண்டு, பெருங்காயம், இஞ்சி, வெங்காயம் சேர்த்து உப்பிட்டு கடைந்து, சாதத்தில் நெய்விட்டு பிசைந்து குழந்தைகளுக்கு ஊட்டலாம். இப்படி சாப்பிட்டு வருவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இக்கீரை பசியை உண்டாக்குவதும், நுரையீரல் நோய்களை குணமாக்குவதும், வாதம், பித்தம், வாய்வு போன்றவற்றை தடுப்பதும் இக்கீரையின் இயல்பான குணமாகும். சளி இருமல்,கபம் மற்றும் நரம்பு தளர்ச்சிக்கும் நல்லது. இதனை சாம்பாராகவும் வைக்கலாம். இதன் தண்டுகளை கழுவி எடுத்து பூண்டு, மிளகு, இஞ்சி சேர்த்து அவித்த சாற்றில் ரசம் வைத்தும் சாப்பிடலாம்.

நோயற்ற வாழ்க்கைகு நாடுவோம் அரைக்கீரை.

0 comments: