Get paid To Promote at any Location

கோவைக்காய் சமைக்கும் முறை



கோவக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடிகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

ரகம்- 2 சர்க்கரை நோயாளிகள் தினமும் கோவக்காயை சமைத்து சாப்பிட்டால் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம். அனைத்துக் கடைகளிலும் மிக எளிதாகக் குறைந்த விலையில் கிடைக்கும் கோவக்காய் நார்ச்சத்து நிரம்பியது. அதை சமைத்தும் பச்சையாகவும் சாப்பிடலாம். இதைப்பற்றி நமது பல வலைபதிவ நண்பர்கள் கும்மிருந்தார்கள்.இதை மருந்து மாதிரி சாப்பிடாமல் எப்படி சுவையாக சாப்பிடலாம் என்பதற்கான எனது முயற்சி


அதை எவ்வாறு சமைப்பது என்பதை காண்போம்

தேவையானப் பொருட்கள்

கோவங்காய்-1/4கிலோ
வெங்காயம்- ஒன்று
தக்காளி - 2
எண்ணெய் - ஒரு மேசக்கரண்டி
குழம்பு தூள-இரண்டு தேக்கரண்டி
மஞ்சத்தூள் -அரைதேக்கரண்டி
கடுகு சீரகம்-ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை-ஆறு எண்ணிக்கை
உளுத்தம் பருப்பு-ஒரு தேக்கரண்டி
தேங்காப் பூ--மேசைக்கரண்டி
உப்புத்தூள்-ஒரு தேக்கரண்டி
பாசிப்பருப்பு-7மேசைக்கரண்ட

கோவைக்காய் ,தக்காளி வெங்காயம், ஆகியவற்றை வட்டம்வட்டமாக நறுக்கி கொள்ளவும்
சட்டியில் எண்ணெயை காயவைத்து கடுகுசீரகம் உ.பருப்பு,சோம்பு கறிவேப்பிலை போட்டு பொரிந்தவுடன் வெங்காயத்தை போட்டு வறுக்கவும்.

தக்காளி போட்டு நன்கு சுருள வதங்கியதும பிறகு நறுக்கி வைத்துள்ள காய்களை போட்டு அதை தொடர்ந்து உப்பு,குழம்பு தூள்,மஞ்சத்தூளப் போட்டு நன்கு கிளறவும் அதில் ஊறவைத்த பாசிப்பருப்பை போட்டு , தேங்காப்பூவை போட்டு கிளறி, 1 1/2கப் தண்ணிர் ஊற்றி 1 விசில் போட்டு இறக்கிவிடவும்

இது சப்பாத்தி சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்

தாவணி போட்ட தக்காளி

என்ன செய்யறது இப்படி தலைப்பு வைச்சாதான், வந்து பதிவ படிக்கிறாங்க. தக்காளி பானத்த குடித்து உடலை பளபளன்னு ஆக்கிடுங்க.
தக்காளியின் பிறப்பிடம் தென் அமெரிக்கா. இது சர் வால்டர் ராலே என்பவரால் முதன்முதலில் ஐரோப்பாவில் அறிமுகபடுத்தப் பட்டது.

இதில் தண்ணீர் - 94.37%, புரொட்டீன் - 0.9%, கொலஸ்ட்ரால்- 0.4%, கார்போ ஹைட்ரேட்௩.9%, மினரல்ஸ்-0.9%, விட்டமின் 'A'- 100IU / 100 கி, விட்டமின் - C, B1,B2, கால்சியம், பாஸ்பரஸ், மாக்னீசியும் மற்றும் பல உள்ளன.

சிட்ரிக் மற்றும் பாஸ்பரிக் அமிலங்கள் இரத்தத்தை சுத்திகரிக்க அதிகம் உதவுகிறது. தினமும் நான்கு தக்காளி உண்டால் போதும் ஒரு நாளைக்கு தேவையான வைட்டமின் 'சி' கிடைத்து விடும். தக்காளி பழுக்க,பழுக்க வைட்டமின் 'சி' அதிகரித்துக் கொண்டே இருக்கும். சிறு குழந்தைகளுக்கு தக்காளி சாறு நிறைய கொடுக்கலாம். ஏனெனில் இது ஆரஞ்சு பழச்சாறை விட நல்லது. பொதுவாக பரவலாக இதை சாலட்டாக பயன்படுத்துகிறார்கள். தென்னிந்திய பகுதியில் சமையிலிலும், வட இந்தியாவில் இதை சூப்பாக அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

பயன்கள்
இதில் குறைவான கார்போஹைட்ரேட் இருப்பதால் உடல் எடை குறைப்பிற்கும், நீரிழிவு நோயாளிகளுக்கும் மிக சிறந்ததாகும். மேலும் குடல்களி சுத்தப்படுத்தும், மலச்சிக்கல், ஜீரணம், வாய்வு ஆகியவற்றையும் நீக்கும். கல்லீரல் நோயக்கும், இரத்த சோகைக்கும் மிக சிறந்த பானமாகு.. இதை காய்ச்சலின் போதும் குடிக்கலாம்.

கொள்ளு சூப் தயாரிக்கும் முறை (சளி மருந்து)

கரைக்கவே முடியாத நெஞ்சில் கட்டிக் கொண்டிருக்கும் சளியைக் கரைக்க,கொள்ளு(காணப்பயறு)சூப் அருமையான மருந்து என்று சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இது சளிக்கு சரியான மருந்து. மேலும் இது என் சுய அனுபவத்தில் பயன்படுத்தி குணமடைந்திருக்கிறேன். .

கொள்ளு சூப் தயாரிக்கும் முறை

கொள்ளு - 2 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம்- 1/2 தேக்கரண்டி
பூண்டு - 2 பல்
தக்காளி - 1
கொத்தமல்லித்தழை- சிறிது
கறிவேப்பிலை - சிறிது

இவை யாவற்றையும் ஒன்றாக வைத்து அம்மியில் அல்லது மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.4கப் தண்ணீரில் கரைத்து,1 தேக்கரண்டி நல்லெண்ணெய், 1/4 தேக்கரண்டி மஞ்சள் பொடி போட்டு அடுப்பில் வைத்து கொதித்ததும் இறக்கி, தேவையான அளவு உப்பு போட்டு குடிக்கவும். சிறிய குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அருந்தலாம். குளிர் காலங்களில் இந்த சூப் குடித்தால் சளி பிடிக்காது.

கண்ணும் உணவும்

நம் தினசரி உணவுப் பழக்க வழக்க முறைகளிலேயே கண்களைப் பாதுகாக்கும் விஷயங்கள் அடங்கி உள்ளன, உதாரணமாக பச்சைக் காய்கறிகள் கண்கள் ஆரோக்கியத்திற்கு ஆற்றும் பணிகளைப் பற்றி நாம் சுருக்கமாக பார்ப்போம்.

பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சியும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகளின் முதன்மை ஆதாரங்களும் அடங்கி உள்ளன. பார்வைக்கு தெரியும் ஒளியின் நீலமான பகுதிக்குத்தான் கண்களின் விழித்திரை அதிகமாக பாதிக்கப்படுகிறது, இது கண் விழித்திரைக்கு பின்பகுதியில் உள்ள ஆயஉரடய-வை சேதம் செய்யலாம். இந்தப் பகுதிதான் நம் கூர்மையான பார்வைக்கு உதவும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. பச்சைக் காய்கறிகளுள்ள வைட்டமின் சத்துகள் (Anti - Oxidants) Macula -வை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது.

பசலைக் கீரை, முருங்கை, அகத்திக் கீரை, பொன்னாங்கன்னி, முளக்கீரை, அரக்கீரை, வெந்தயக் கீரை ஆகிய கீரைகளில் இரும்பு, ஃபோலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி-12 ஆகிய சத்துக்கள் அடங்கியிருப்பதால் தினசரி உணவுப் பழக்க வழக்கத்தில் இவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வது நலம்.

தாவர உணவு வகைகளில் பெறப்படும் இரும்புச்சத்து, இறைச்சியில் கிடைக்கும் இரும்புச்சத்தை விட குறைவாகவே உடலில் கலந்தாலும், வைட்டமின் சி-ஆல் இரும்புச் சத்து உடலில் கலப்பது மேம்படுகிறது. பச்சைக் காய்கறிகளுடன் சாலட் மற்றும் எலுமிச்சை நம் பார்வையை பெரிதும் கூர்மையாக்குகிறது. தினசரி சமையல் முறையில் பல வகையான பச்சை காற்கறிகளை சேர்த்துக் கொள்ளவும். ஆனால் அதை கூடிய மட்டும் அதன் சத்துகள் குறையா வண்ணம் சமைப்பது அவசியம்.

Anti oxidants

நம் உடலில் தோன்றும் அனைத்து நோய்களுக்கும் காரணம் Free Radical fns என்பது அனைவராலும் ஏற்கப்பட்ட மருத்துவ உண்மை, நம் உயிரைத் தக்கவைப்பது பிராணவாயு. ஆனால் அதே பிராணவாயுதான் நம் நோய்களுக்கும், மரணத்திற்கும் காரணம் என்று நம்மில் பலருக்கு தெரியாது.


வைட்டமின் இ, சி மற்றும் ஏ, தக்காளி, திண்ணிய பூக்கோசு வகை, காலிஃப்ளவர், பூண்டு, மிளகு, பசலை, தேயிலை, காரட், சோயா மற்றும் முழு தானிய வகைகளிலிருந்து நாம் Anti-oxidant களை பெறலாம். நிறக்கலவை அதிகமுள்ள பழங்கள், காய்கறிகள் ஆகியவைகளில் தாவர உயிர்ச்சத்துகள் அதிகம் உள்ளன.

வைட்டமின் ஏயில் கண்ணையும், மூளையையும் இணைக்கும் முக்கிய சத்து அடங்கியுள்ளது. கண் விழித்திரையிலுள்ள ரோடோஸ்பின் என்ற புரதத்தில் வைட்டமின் ஏ உள்ளது. பார்வையில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் ஏ சத்து பற்றாக்குறையால் முதலில் தோன்றும் அறிகுறி மாலைக்கண் நோய்.

காரட்டில் அதிகமான வைட்டமின் ஏ உள்ளது. வைட்டமின் ஏ வாக நம் உடலில் மாற்றம் அடையும் பீட்டா கரோடின் மற்றும் அதிநிற பழங்களிலும், பச்சைக் காய்கறிகளிலும் வைட்டமின் ஏ உள்ளது.

வைட்டமின் ஏ உணவு : தக்காளி, பசலை, லிவர், முட்டை, நிறமயமான காய்கறிகள், கேரட், பப்பாளி மற்றும் பச்சை இலைகளில் உள்ளது.

கண் பராமரிப்பில் அமினோ அமிலங்கள் :

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு கண்புரை நோய், க்ளுகோமா என்ற கண் விழி விறைப்பு நோய், குறிப்பாக கண் உள்ளிருக்கும் ரத்தக் குழாய்களை சேதடையச் செய்யும் டயாபெடிக் ரெடினோபதி ஆகியவைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. நம் உடலில் இயற்கையாகவே சுரக்கும் அமினோ அமிலங்கள் அல்லது புரத அமிலங்கள் இந்நோய்களை தடுக்க பெரிதும் உதவுகிறது.

உடலில் அதிகமாக சுரக்கும் குளூக்கோஸினால் கண்லென்ஸ் சேதமடைவதிலிருந்து புரத அமிலங்கள் நம்மை காக்கின்றன. சர்க்கரை நோயாளிகளுக்கு அமினோ அமிலச் சத்துகளை வாய் வழியாக கொடுப்பதன் மூலம் சர்க்கரை நோயின் புறவிளைவுகளை தடுக்க முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இறைச்சி, மீன் மற்றும் பாலில் நமக்குத் தேவையான 8 முக்கிய அமினோ அமிலங்கள் உள்ளன. அரிசி, பட்டாணி, பீன்ஸ், அவரை, மொச்சை, துவரை, உளுந்து பயறு போன்றவற்றில் இறைச்சியில் உள்ள அளவுக்கு அமினோ அமிலங்கள் உள்ளன.

கண்கள் உங்களைக் காக்க, நீங்கள் கண்களை காத்துக் கொள்ளுங்கள்

நன்றி : யாழ்

நோயற்ற வாழ்க்கைகு நாடுவோம் அரைக்கீரை

தினந்தோறும் உண்ணும் கீரையில் அரைக்கீரை முதலிடத்தை பெறுகிறது. இக்கீரையில் இரும்பு சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. பத்திய வகை உணவுக்கு தோதான கீரை இது, இக்கீரை தாதுவை வலுப்படுத்தி உடல்பலத்தை பெறுக்குவதில் தூதுவளைக்கு நிகரானது என்றும், உடலில் தேங்கும் வாய்வு, வாதநீர்களை போக்குவதில் முருங்கைகீரைக்கு சமமானது என்றும் கூறுவார்கள். நோயால் தளர்வுற்ற உடலுக்கு வலுவும்,பலனும் தரக்கூடியது. அரைக்கீரையை நாள்தோறும் உணவுடன் சேர்த்து உண்டுவர உடலுக்கு அழகும் வலுவும் கொடுக்கும்.
இந்த கீரையை பழுப்பு இலைகள் இல்லாமல் சுத்தமாக ஆய்ந்து கழுவி விட்டு சமைக்க வேண்டும். இக்கீரையில் வைட்டமின் அ, சி இரண்டும் அதிக அள்வில் உள்ளன. மேலும் புரத்ச்சத்து, சுண்ணாம்பு சத்து மற்றும் நார்சத்துகளுக்கும் குறைவில்லை.இதனை அடிக்கடி உபயோகித்து வந்தால் உடலின் எல்லா பாகங்களும் சீரான வளர்ச்சியை பெறும்.தேகபலமும், ஞாபக சக்தியும் அதிகரிக்கும், மலச்சிக்கலை போக்கி குடலை சுத்தமாக வைத்திருக்க உதவும். இதயத்திற்கு வலிமை தரும்.
இக்கீரை சித்த வைத்தியத்திலும் அதிகமாக பயன்படுகிறது.இக்கீரையின் விதையிலிருந்து தயாரிக்கப்படும் அரைகீரை தைலம் மிகவும் புகழ்பெற்ற தைலமாகும். இது கண்ணுக்கு குளிர்ச்சியையும், தலைமுடி செழித்து வளரவும் உதவுகிறது. இக்கீரைக்கு மற்ற கீரைகளை பிடுங்குவதுபோல் செடிகளை வேரோடு பிடுங்க கூடாது. வேண்டிய கீரைகளை கத்தி அல்லது கத்திரியை கொண்டு வெட்டி எடுத்துக் கொள்ளலாம், அல்லது கையால் கிள்ளி பறித்துக் கொள்ளலாம். இவ்வாறு கிள்ளி பறிப்பதனால்தான் கிள்ளுக்கீரை என்றும் அழைக்கிறார்கள்.
இக்கீரையோடு மிளகு, பூண்டு, பெருங்காயம், இஞ்சி, வெங்காயம் சேர்த்து உப்பிட்டு கடைந்து, சாதத்தில் நெய்விட்டு பிசைந்து குழந்தைகளுக்கு ஊட்டலாம். இப்படி சாப்பிட்டு வருவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இக்கீரை பசியை உண்டாக்குவதும், நுரையீரல் நோய்களை குணமாக்குவதும், வாதம், பித்தம், வாய்வு போன்றவற்றை தடுப்பதும் இக்கீரையின் இயல்பான குணமாகும். சளி இருமல்,கபம் மற்றும் நரம்பு தளர்ச்சிக்கும் நல்லது. இதனை சாம்பாராகவும் வைக்கலாம். இதன் தண்டுகளை கழுவி எடுத்து பூண்டு, மிளகு, இஞ்சி சேர்த்து அவித்த சாற்றில் ரசம் வைத்தும் சாப்பிடலாம்.

நோயற்ற வாழ்க்கைகு நாடுவோம் அரைக்கீரை.

கட்டுடலை பேணிக்காக்கும் புரதம். . .

ஆரோக்கிய வாழ்விற்கு அடிப்படை சரிவிகித உணவுகள், சரிவிகித உணவில் புரதச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, உயிர்ச்சத்துகள் போன்ற சத்துக்கள் உடல்நலத்தை பாதுகாக்க துணை புரிகின்றன. இதில் புரதச் சத்து மிக முக்கிய பங்காற்றுகிறது. உடல் வளர்ச்சிக்கும், உடல் பராமரிப்பு பணிக்கும் புரதச் சத்து இன்றியமையாததாகிறது. மேலும் புதிய திசுக்கள் வளர்ச்சி பெறச் செய்யவும் உடலில் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கவும் புரதம் துணை புரிகிறது.

புரதச் சத்துக்களின் பயன்கள் :

எலும்பு வளர்ச்சி, மண்ணீரல், கல்லீரல், திசுக்கள் வளர்ச்சி, பித்த நீர்ப்பை, நிணநீர்ப்பை, கணையம், தைமஸ் இவற்றின் பண்புகளையும் பணிகளையும் செவ்வனே செய்வதில் துணை புரிகிறது. கொழுப்பு சக்தியை உபயோகிப்பதிலும் வெள்ளை மற்றும் சிவப்பணுக்களின் உற்பத்தி, உணவு செரித்தல், உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுத்தல் போன்ற பணிகளை செவ்வனே செய்கின்றது. மேலும் வயது முதிர்வதை தள்ளிப்போடுதல், திசுக்களை புதுப்பித்தல், இரத்த சோகையை வரும்முன் காத்தல், பற்கள், நுரையீரல், இரத்தக் குழாய்கள், இதயம் இவற்றை பாதுகாப்பதிலும் பலப்படுத்துவதிலும், தசை திசுக்களின் ஆற்றலை அதிகப்படுத்துவதிலும் புரதத்தின் பங்கு இன்றியமையாததாகிறது. முடி உதிர்வதை தடுத்து மயிர்க்கால்களுக்கு ஆரோக்கியத்தையும், பளபளப்பையும் கொடுத்து, கட்டுடல் பெற செய்து அழகும் வனப்பும் பெற செய்ய புரதச் சத்து உதவுகிறது.

புரதச்சத்து காணப்படும் காய் மற்றும் கனி வகைகள்

காய்கறிகள்


கீரைகள், காரட், பீட்ரூட், வெள்ளரிக்காய், முள்ளங்கி, தக்காளி, புதினா, பூண்டு, தேங்காய், முளைத்த பயறு வகைகள், முளைவிட்ட சோயா, முட்டைகோஸ், காலிபிளவர், முளைவிட்ட கொண்டைகடலை, வெங்காயம்.

பழங்கள்

கொய்யா, திராட்சை, ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி, அன்னாசிப்பழம், பப்பாளிப்பழம், ப்ளம்ஸ், மாதுளம் பழம், அத்திப்பழம்.

முதல் தரமான புரதச் சத்து காய் கனிகளிலா அல்லது இறைச்சி வகைகளிலா என்றால் எதுவும் முதல்தரம், இரண்டாம் தரம் என்றில்லை. எல்லாம் ஒரே தரமேதான்.

மாமிசம் எல்லா புரத சத்துக்களையும் ஒரே உணவில் அபரிமிதமாக தான்.

காய்கனிகளில் புரதச்சத்து தனித்தனியே இருக்கும். அவற்றை தனித்தனியே உட்கொள்ள அவை எல்லாம் ஒருங்கிணைந்து வேலை செய்யும். எனவே சைவ உணவு உட்கொள்பவர்கள் கவனமாக உணவை சரிவிகிதத்தில் சேர்த்து உண்ணவும்.

காரட்டிலும், பீட்ரூட்டிலும், கீரை வகைகளிலும் ஐசோலூசின் மற்றும் மெத்தியோனின் என்ற புரதசத்துக்கள் காணப்படுவதில்லை.

ஐசோலீசின் என்ற புரதம் : தைமஸ் சுரப்பிகள், மண்ணீரல், பிட்யூட்டரி சுரப்பி, இரத்த ஹீமோகுளோபின்களின் ஆற்றலை மேம்படுத்துகிறது. எனவே, ஐசோலீசினில் காணப்படும் உணவான பப்பாளிப்பழம், தேங்காய் போன்றவற்றைச் சாப்பிட வேண்டும்.

இந்தப் புரதம் உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், இரத்தச் சிவப்பு அணுக்களையும் ஹீமோகுளோபின் என்ற இரத்த திரவத்தையும் உற்பத்தி செய்வதில் பயன்படுகிறது.

இதே போல மெத்தியோனின் என்ற புரதமும், காரட், பீட்ரூட்களில் காணப்படுவதில்லை.

மெத்தியோனின் புரதத்தின் பணி இரத்த சிவப்பு அணுக்கள், மண்ணீரல், பித்த நீர் சுரப்பிகளில் சுரக்கும் ஆற்றலை மேம்படுத்த உதவும்.

முட்டைகோஸ், காலிபிளவர், பூண்டு, அன்னாசி, ஆப்பிள் போன்றவற்றில் மெத்தியோனின் உள்ளது. இவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது.

எனவே புரதம் காணப்படும் காய்கனிகளை அளவோடு சரிவிகிதத்திலும் சேர்த்துக் கொண்டால் உங்கள் அறிவுத் திறனையும், உடல் திறனையும் மேம்படுத்தி கட்டுடலையும் கண்டிப்பாகப் பெறலாம்.

நன்றி : வெப்துனியா

சிறுகீரை


சிறுகீரை ஒரு சத்து மிகுந்த கீரையாகும். இது மருத்துவ மகத்துவம் வாய்ந்தது. இந்தக் கீரையையினால் உடலுக்கு அழகும் வனப்பும் கிடைக்கும்.இது காச நோய்,படலம்,பாதரச வேகம், வெரணம், மூத்திரக் கிரிச்சர வீக்கம், பித்த் நோய், தாவரங்களினால் ஏற்படும் நஞ்சு முதலியவைகள் நீங்கும்.
மேலும் இக்கீரை வாத நோயை நீக்க கூடியது என்பார்கள்.அத்துடன் கல்லீரலுக்கும் நன்மையைச் செய்யும். விஷக்கடி முறிவாக பயன்படக்கூடிய இக்கீரை , சிறுநீரகம் தொடர்பான குறைபாடுகளையும் அகற்றவல்லது,
பயிரிடப்படும் முறை
இக்கீரை இந்தியாவெங்கிலும் தோட்டப்பயிராகவும், காட்டுப்பயிராகவும் பயிரிடப்படுகிறது. வீட்டுத்தோட்டங்களிலும் பயிரிடலாம். இக்கீரையை பயிரிடுவதற்கு முன் இதற்குரிய பாத்தியை முன்பே ஏற்பாடு செய்து கொள்ளவேண்டும். கோடக்கால இறுதியில் விதைகளை அதிக நெருக்கமில்லாமல் விதைப்பது நல்லது. விதைத்த பாத்திகளில் பூவாளியினால் தண்ணீரை காலை வேளைகளில் தெளிப்பது நல்லது. இகீரைக்கு தண்ணீர் அதிகம் தேவையில்லை. ஆனால் பாத்தி எப்போதும் ஈரமாக இருக்க வேண்டும்.நிழல் கூடாது, வெளிச்சம் மிகுதியும் தேவை. 25 நாட்களில் கீரை தயாராகிவிடும். 40 அல்லது 50 நாட்களில் இக்கீரையை செடியோடு பிடுங்கி உபயோகப்படுத்தலாம்.
இச்சிறுகீரையில் உள்ள சத்துக்கள்:
சக்தி - 33 கலோரி, நீர்சத்து - 90கிராம், புரதம் - 2.8கிராம், கொழுப்பு - 0.3கிராம், தாதுக்கள் - 2.1கிராம், கார்போஹைட்ரேட் - 4.8கிராம், கால்சியம் - 251 மில்லி கிராம், பாஸ்பரஸ் - 55 மில்லி கிராம், இரும்பு - 27.3 மில்லி கிராம் ஆகிய சத்துக்கள் உள்ளன.

இக்கீரையுடன் சீரகம், மிள்கு, சோம்பு, வெங்காயம், இஞ்சி, தக்காளி, உப்பு ஆகியவற்றை சேர்த்து வேகவைத்து சூப் வைத்தும் சாப்பிடலாம், கீரையை கடைந்து சாதத்துடனும் சாப்பிடலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இக்கீரையை தினமும் சாப்பிட்டால் இன்சுலின் இயல்பாக சுரக்கும் என்பார்கள்.
நல்ல சுவையும் நாவிற்கு ருசியும் உடலுக்கு வலுவும் கொடுக்கும் இக்கீரையை வீட்டுத்தோட்டங்களில் வளர்த்து உணவுடன் சேர்த்து பயனடையுங்கள்.