Get paid To Promote at any Location

கொள்ளு சூப் தயாரிக்கும் முறை (சளி மருந்து)

கரைக்கவே முடியாத நெஞ்சில் கட்டிக் கொண்டிருக்கும் சளியைக் கரைக்க,கொள்ளு(காணப்பயறு)சூப் அருமையான மருந்து என்று சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இது சளிக்கு சரியான மருந்து. மேலும் இது என் சுய அனுபவத்தில் பயன்படுத்தி குணமடைந்திருக்கிறேன். .

கொள்ளு சூப் தயாரிக்கும் முறை

கொள்ளு - 2 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம்- 1/2 தேக்கரண்டி
பூண்டு - 2 பல்
தக்காளி - 1
கொத்தமல்லித்தழை- சிறிது
கறிவேப்பிலை - சிறிது

இவை யாவற்றையும் ஒன்றாக வைத்து அம்மியில் அல்லது மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.4கப் தண்ணீரில் கரைத்து,1 தேக்கரண்டி நல்லெண்ணெய், 1/4 தேக்கரண்டி மஞ்சள் பொடி போட்டு அடுப்பில் வைத்து கொதித்ததும் இறக்கி, தேவையான அளவு உப்பு போட்டு குடிக்கவும். சிறிய குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அருந்தலாம். குளிர் காலங்களில் இந்த சூப் குடித்தால் சளி பிடிக்காது.

19 comments:

Anonymous said...

Good Post. I also suffered. I will try .

said...

இங்கே கொள்ளு கிடைக்கரதில்லை.

horse gram ன்னு கேட்டு அலைஞ்சாச்சு. இங்கத்துக் குதிரைகள் கேரட் தின்னுதுங்க.

வேற எந்தப் பெயரில் கிடைக்குமுன்னுத் தெரிஞ்சாச் சொல்லுங்களேன்.

said...

வேறு எப்படி அழைப்பது என்று தெரியவில்லை. வேண்டுமென்றால் சொல்லுங்கள், நான் சிங்கையிலிருந்து அனுப்பி வைக்கிறேன்.

said...

இக்பால் கலக்கறீங்க!!

ட்ரை பண்றேன்.

Anonymous said...

சளிக்கு அருமையான மருந்து. மிக்க நன்றி, அப்படியே அந்த முடி உதிர்வுக்கும், பொடுகிற்கும் ஏதாவது இயற்கை வைத்தியம் இருந்தால் கூறுங்களேன்.

said...

நிச்சயமாக சேகரித்து எழுதுகிறேன். என் வலைபதிவுக்கு வந்தமைக்கு நன்றி.

Anonymous said...

வயசாச்சு, டாக்டர் இரத்தத்தில கொலஸ்ரோரல், வி.வி இருக்கு என பயங்காட்டிறார்.
ஏதும் வழி இருந்தா சொல்லப்பா.


புள்ளிராஜா

said...

நல்லாருக்கே செய்து பாத்துடறேன்.. கொள்ளு வச்சிட்டு என்ன செய்யறதுன்னு தெரியாம இருந்தேன்.. ஒரு முறை கொள்ளு தோசைன்னு ஒன்னு படிச்சு அதுக்காக வாங்கிவச்சேன்..நன்றி.

Anonymous said...

Kollu Rasam is for Cold....

Check Coimbatore village people....Kollu kadainchu.... rasam vachu.....

Anonymous said...

My amma makes this. We call it Kollu rasam. Amma makes this atleast once a week. Here in USA we can buy kollu in the super market. They call it lentils here.

Ramya

said...

இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு என்பார்களே அது நினைவுக்கு வந்தது. இயற்கையோடு இயைந்த வாழ்க்கைமுறை பதிவுகள் பயனுள்ளதாக இருக்கின்றன.

said...

வரவுக்கு நன்றி, மாதங்கி..

Anonymous said...

In American super market they call
கொள்ளு as lentils. American's use this lentils for soup etc.They taste good too.

Ravi

said...

The lentils what we get here in NZ is not KOLLU(-:

Anonymous said...

Do you need to soak the kollu before grinding?

said...

கலக்கறீங்க இக்பால்.மிக்க நன்றி

said...

நன்றி ஹரிராஜ்

said...

நன்றி

said...

நன்றி